Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்ஜிக்குள் சாரதாவின் உடல் பாகங்கள்.. மற்றொரு அறையில் பெண்களுடன் உல்லாசம்.. அலற வைக்கும் அப்தாப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை வெட்டி கொன்று அந்த உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்த காதலன், அன்றைய தினமே வேறு சில பெண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வசாய் பகுதியை சேர்ந்தவர் சாரதா வாக்கர். இவருக்கு 26 வயது. இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மும்பையை சேர்ந்த அப்தாப் பூனாவாலா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மாதங்களுக்கு முன் சாரதாவை அப்தாப் டெல்லிக்கு அழைத்து வந்தார். அங்கு மெஹ்ராலி பகுதியில் ஒரு வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

திருமணம்

திருமணம்

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வசித்து வந்தனர். சாரதா டெல்லியில் இருப்பதே அவரது பெற்றோருக்கு தெரியாது. ஒரு முறை அவரது பேஸ்புக் பக்கத்தை வைத்துதான் அவர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைசியாக அவர் ஹிமாச்சல் பிரதேசம் செல்ல இருப்பதாகவும் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

பேஸ்புக்

பேஸ்புக்

இதன் பிறகு பல நாட்களாக அவர் பேஸ்புக்கில் எந்த பதிவையும் போடவில்லை. அவருடைய செல்போனும் கடந்த இரு மாதங்களாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்தாபும் தனியாகவே வேலைக்கு சென்று வந்துள்ளார். இதை சாரதாவின் சகோதரரிடம் அப்தாபின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சாரதாவின் தந்தை கடந்த 8ஆம் தேதி டெல்லியில் தனது மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

மகளை காணவில்லை

மகளை காணவில்லை

இதனால் தனது மகளை காணவில்லை என்றும் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று மொஹாலியில் உள்ள போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் தலைமறைவாக உள்ள அப்தாபை தேடி வந்தனர். அப்போது டெல்லியில் பல இடங்களில் துண்டு துண்டாக மனித உடல் பாகங்கள் வீசப்பட்டது போலீஸாருக்கு தெரியவந்தது. அது சாரதாவின் உடல் பாகங்கள் என்றும் தெரியவந்தது.

 தனிப்படை

தனிப்படை

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 12 ஆம் தேதி அப்தாபை கைது செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பம்பிள் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 2019ஆம் ஆண்டு சாரதாவுக்கும் அப்தாபுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரே கால் சென்டரில் பணிபுரிய தொடங்கினர்.

காதல்

காதல்

இதையடுத்து இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த ஜோடி டெல்லி மெஹ்ராலிக்கு இடம் பெயர்ந்து லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தனர். லிவ் இன் உறவில் இருந்துஅப்தாபிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சாரதா வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சாரதா

சாரதா

இது போல் கடந்த மே 18 ஆம் தேதியும் சண்டை முற்றியதால் அமெரிக்க கிரைம் படமான டெக்ஸ்டரை முன்னுதாரணமாக வைத்து சாரதாவை அப்தாப் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார். பின்னர் அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ் வாங்கி அதில் 20 நாட்கள் அந்த உடல் பாகங்களை வைத்திருந்தார். தினந்தோறும் உடல் பாகத்தை எடுத்து துண்டு துண்டுகளாக வெட்டி அதை பிளாஸ்டிக் பையில் போட்டு அதிகாலை நேரங்களில் நடந்தே சென்று டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசிவிட்டு வந்துள்ளார்.

 துர்நாற்றம்

துர்நாற்றம்

வீடு முழுவதும் துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக ஊதுபத்திகளை ஏற்றியுள்ளார். சாரதாவின் ரத்தம் படிந்த ஆடைகளை குப்பை வேனில் வீசியுள்ளார். அந்த பெண்ணை கொன்ற 15 - 20 நாட்களுக்கு அதே டேட்டிங் ஆப் மூலம் வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்ய தொடங்கி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். சாரதாவின் உடல் பாகங்கள் மற்றொரு அறையில் இருந்த நிலையில் அப்தாப் பல பெண்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+