மத்திய அரசுக்கு எதிராக.. கெஜ்ரிவால் பெரியமூவ்! கூட்டத்தில் பங்கேற்ற பல ஆயிரம் பேர்! குலுங்கிய டெல்லி
டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் செயல்பாடுகளை கண்டித்தும் இன்று டெல்லியில் ஆம்ஆத்மி சார்பில் மிகப்பெரிய அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டதால் டெல்லி குலுங்கியது.
டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அனுமதி இருப்பதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கு திருத்தத்துக்கு கட்சிகள் ஆதரவு வழங்க கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை கெஜ்ரிவால் சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் ‛‛இந்த விஷயத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் என்பது நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிவிடும். ஏனென்றால் அங்கு பாஜகவுக்கு மெஜாரிட்டி உள்ளது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் அங்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட வேண்டும்'' என கூறி வருகிறார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று மத்திய அரசின் செயலை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் மிகப்பெரிய அளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆம்ஆத்மி கட்சியினர் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.
இந்த பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மதியம் 12 மணிக்கு துவங்கி நடைபெற்றது.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை சுற்றி 12 கம்பெனி பாரா மிலிட்டரி வீரர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டம் பற்றி நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛டெல்லி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார சட்டத்திற்கு எதிராக நாளை (அதாவது இன்று)டெல்லி மக்கள் ஒன்றுகூடி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவார்கள். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்'' என்றார். இந்த ட்வீட் மூலம் தனது கூட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications