வெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்!
Recommended Video

டெல்லி: டிவி சானல்களில் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய சிங்கம் அபிநந்தன் முகம்தான். பாகிஸ்தானுக்குள் புகுந்து எதிரிப்படை விமானத்தைத் தாக்கி தகர்த்து சாதனை செய்த அபிநந்தன் இன்று ஹீரோவாக நாடு திரும்பியுள்ளார்.
யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் அக்கறையில்லைன்னு அலுத்துக்கறோம். ஆனா, நாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் சிங்கம் போல சிலிர்த்தெழு விடும் ஒட்டு மொத்த தேசமும். அப்படித்தான் நடந்ததன அபிநந்தன் விஷயத்திலும்.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியதால் மக்கள் பெருத்த சோகமடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். டிவி சானல்கள் எல்லாம் அபிநந்தன் குறித்த விவாதங்களுக்குத் திரும்பின. வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருந்த சானல்களை தேசத்திற்காக பேச வைத்தார் அபிநந்தன்.
விளம்பரம், வருமானம் என்று கவலைப்படாமல் தொடர்ந்து சின்னத்திரை செய்தி சேனல்கள் அபிநந்தன் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தது பாராட்டுதல்களுக்கு உரியதுதானே.
இந்தியாவின் 130 கோடி மக்களின் குரல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் காதுகளில் ஒலித்து கருணையை வரவழைத்து இருக்குமோ... இதற்கு நம் நாட்டு செய்தி சேனல்களும், உலகளாவிய செய்தி சேனல்களும்தான் காரணம்.. சமூக வலைத் தளங்களில் அபிநந்தன் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி உள்ளது.
உறக்கமின்றி, உணவு இன்றி தண்ணீரின்றி தவித்தும், செய்திகளை உடனுக்குடன் கொடுத்த செய்தி சேனல்களுக்கு இந்த நேரத்தில் சல்யூட்.. ஜெய்ஹிந்த், வெல்கம் ஹோம் அபிநந்தன்!
அதை விடுங்க.. வெல்கம்ஹோம் அபிநந்தன் என்கிற ஆங்கில வார்த்தை உலகளாவிய டிரெண்டிங்கில் வலைத்தளங்களில் முதலிடம் பிடித்துள்ளது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications