இயற்கை மரணங்கள் 2020: இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ன காரணத்தால் மரணம் அதிகம்!
டெல்லி :கடந்த 2019ம் ஆண்டை விட 2020ல் நாட்டில் இயற்கை மரணங்கள் 11.1 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 இல் 4,21,104 ஆக இருந்த பல்வேறு இயற்கை காரணங்களால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை, 2020ல் 3,74,397 ஆக குறைந்தது. 3,74,397 இறப்புகளில், 7,405 (2.0 சதவீதம்) இயற்கை (உடல்நிலை பாதிப்பு) மரணம் ஆகும். அதே சமயம் 3,66,992 ( 98.0 சதவீதம்) இறப்புகள் வேறு காரணங்களால் நிகழ்ந்தன.
இயற்கையின் காரணங்களால் 2019ல் 8,145 ஆக இருந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020ல் 9.1 சதவீதம் குறைந்து 7,405 ஆக குறைந்துள்ளது. பிற காரணங்களால் 2019ல் 4,12,959 இறப்புகள் ஏற்பட்ட நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 11.1 சதவீதம் குறைந்து 3,66,992 ஆகவும் குறைந்துள்ளது.

உத்தரப்பிரதேசம்
நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 9.1 சதவீத மக்கள்தொகைப் பங்கைக் கொண்ட மகாராஷ்டிரா, அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை (57,806) பதிவு செய்துள்ளது, இது 15.4 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் 16.9 சதவீத மக்கள்தொகைப் பங்கைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ( அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்) 31,691 பேர் இறந்துள்ளனர். அதாவது 8.5 சதவீதம் ஆக உள்ளது.

மத்திய பிரதேசம்
அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட மொத்த இயற்கை மரணங்கள் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் (10.8 சதவீதம்), கர்நாடகா (6.5 சதவீதம்), ராஜஸ்தான் (6.0 சதவீதம்), குஜராத் (5.6 சதவீதம்), சத்தீஸ்கர் (5.4 சதவீதம்), ஒடிசா (5.0 சதவீதம்), தமிழ்நாடு ( 4.9 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கம் (4.0 சதவீதம்) ஆக உள்ளது.

மகாராஷ்டிரா
சத்தீஸ்கர் (68.6 சதவீதம்), புதுச்சேரி (56.9 சதவீதம்), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (53.3 சதவீதம்), ஹரியானா (50.8 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (48.4 சதவீதம்) மற்றும் மகாராஷ்டிரா (46.7 சதவீதம்) பதிவாகியுள்ளன. தேசிய சராசரி இயற்கை மற்றும் விபத்து எண்ணிக்கை 27.7. சதவீதம்ஆக உள்து.

சூறாவளி
நாட்டின் சராசரியான 27.7 சதவீத இறப்புகளுடன் ஒப்பிடுகையில், நாட்டில் உள்ள 18 மாநிலங்கள் அதிக இறப்பு விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. மேற்கு வங்காளத்தில் பெரும்பாலான விபத்து மரணங்கள் என்பது அங்கு ஏற்பட்ட சூறாவளிகளால் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 59.5 சதவீதம் ஆகும். ஜார்க்கண்டில், பெரும்பாலான இயற்கை இறப்புகள் "பெருமழை" காரணமாக ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்
மின்னல் தாக்குதலால் ஏற்படும் மரணம் முக்கிய காரணியாக சில மாநிலங்களில் இருக்கிறது. சத்தீஸ்கரில் ஏற்பட்ட இயற்கை மரணங்களில் 270பேரில் 240 பேர் மின்னல் காரணமாக இறந்துள்ளனர். தமிழகத்தில் 71 பேரில் 64 பேர் மின்னல் காரணமாகவும், மத்திய பிரதசத்தில் 561 பேரில் 429 பேரும், ஜார்க்கண்டில் 475 பேரில் 336 பேரும் மின்னல் காரணமாக பலியாகி உள்ளனர்.

வெயில்
பீகாரில் 54.7 சதவீதம் (1437 இறப்புகளில் 786 பேர்) வெள்ளம் காரணமாக இறந்துள்ளனர். ஹரியானாவில் 71.6 சதவீதம் பேர் (74 இறப்புகளில் 53 பேர்) குளிர் காரணமாகவும் இறந்துள்ளனர். தெலுங்கானாவில் இயற்கையின் சக்திகளால் ஏற்படும் மொத்த விபத்து மரணங்களில் 57.6 சதவீதம் வெயில் காரணமாக (170 இறப்புகளில் 98) ஏற்படுகிறது.

கேரளா
நிலச்சரிவை முக்கிய காரணியாக சில மாநிலங்களில் ஏற்பட்ட விபத்துக்களை என்.சி.ஆர்.பி அறிக்கை வகைப்படுத்துகிறது. மிசோரம் (4 இறப்புகளில் 4), கேரளா (78 இறப்புகளில் 70) உத்தரகாண்ட் (73 இறப்புகளில் 44) மற்றும் சிக்கிம் (73 இறப்புகளில் 44) ஆகிய மாநிலங்களில் நிலச்சரிவால் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications