Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழிவறை நீரில் காபி! வாஷிங் பவுடரை ஷாம்பாக்கிய கொடூரம்! போதை வழக்கில் கைதான நடிகை பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போதை பொருள் கடத்தியதாக ஷார்ஜா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா கழிவறை நீரில் காபி குடித்ததாக தனது சிறை அனுபவங்களை மன வேதனையுடன் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்திருந்த சதக் 2 படத்தில் நடித்திருந்தார். இவர் ஒரு வெப் தொடருக்காக ஷார்ஜாவில் நடந்த நடிகைகள் தேர்வுக்கு சென்றிருந்தார்.

 Actress Chrisann Pererira says she made coffee from toilet water in Sharjah prison

அப்போது விமான நிலையத்தில் அவர் எடுத்து வந்திருந்த ஒரு பையில் போதை பொருள் இருந்ததாக கூறி அவரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கிறிசன் பெரேரா கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

துபாயில் போதை பொருள் வழக்கில் யார் சிக்கினாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அந்த வகையில்தான் நடிகை கிறிசனுக்கு சிறையில் கடுமையான தண்டனைக்குள்ளானார். எனினும் இவர் மீது எந்த தவறும் இல்லை என உறுதியானதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிசன் பெரேரா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கழிவறையில் தண்ணீரை பிடித்து அதில் தனக்கு காபி போட்டு குடித்ததாகவும் துணி துவைக்கும் பவுடரை பயன்படுத்தி தலைக்கு ஷாம்புவுக்கு பதிலாக போட்டு குளித்ததாகவும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் மனம் நொந்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்ஸ்டாவில் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பேனாவையும் காகிதத்தையும் கண்டுபிடிக்க எனக்கு 3 வாரங்கள் ஆகிவிட்டது. கழிவறை நீரில் காபி போட்டு குடித்து துணி துவைக்கும் வாஷிங் பவுடரில் தலைக்கு குளித்து மிகவும் கொடூரம். அதன் பிறகு சில பாலிவுட் படங்களை பார்த்தேன்.

இந்தியராக இருப்பதற்கும் இந்தியாவை சேர்ந்த திரைத்துறையில் இருப்பதையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன் என தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த கடிதத்தில் கிறிசன் பெரேரா கூறியிருந்தார். மும்பையை சேர்ந்த ஆன்டனி பால் என்பவர்தான் கிறிசனை போதை பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார்.

 Actress Chrisann Pererira says she made coffee from toilet water in Sharjah prison

கிறிசன் பெரேரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கியுள்ள அதே அடுக்குமாடி குடியிருப்பில்தான் அந்த நபரும் தங்கியிருந்தார். பெரேரா வழக்கில் ஆன்டனி பாலை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது டிகிரி முடித்துள்ள ஆன்டனி, 2012 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார்.

இதையடுத்து அவர் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் கேக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் பலரை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கும் தொழிலை செய்துள்ளார். இவரால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டனராம். பாலிவுட் நடிகை கிறிசன் 5ஆவது நபராகும். யாரெல்லாம் ஆன்டனியிடம் மோதுகிறார்களோ அவர்களை எல்லாம் போதை பொருள் வழக்கில் சிக்க வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மும்பையில் சாலையில் சென்ற தெரு நாய் குலைத்ததற்காக அதை கல்லை கொண்டு தாக்க ஆன்டனி முயன்ற போது அந்த செயலை கிறிசனின் தாய் தடுத்துள்ளார். அது போல் கொரோனா இரண்டாவது அலையின் போது முகக்கவசம் அணியாமல் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த ஆன்டனியிடம் மிகவும் கண்டிப்புடன் முகக் கவசம் அணியுமாறு கிறிசனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆன்டனி கடுங்கோபமடைந்துள்ளார். அதனால் எப்படியாவது அவருடைய குடும்பத்தினரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவர் கிறிசனை போதை பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார். ஷார்ஜாவுக்கு கிறிசன் போவதை அறிந்த ஆன்டனி, அவராகவே ஆட்களை செட்டப் செய்து கிறிசனின் பையில் போட வைத்திருப்பார். பின்னர் இவரே ஷார்ஜா போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அப்படி சிக்கும் நபர்களின் குடும்பத்தினரிடம் எனக்கு தெரிந்த வழக்கறிஞர் இருப்பதாகவும் அவர் உங்கள் உறவினரை வெளியே கொண்டு வந்துவிடுவார் என்றும் கூறி பணத்தை பறிப்பாராம். அது போல் நடிகை கிறிசன் குடும்பத்தினரிடம் இருந்து 80 லட்சம் வரை பணத்தை பெற ஆன்டனி முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+