பாக்க ‘வேக வைத்த முட்டை’ மாதிரியே இருக்காங்க! பாலிவுட் வாரிசுகளை வம்பிழுக்கும் கங்கனா! என்ன காரணம்.?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்,பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் கடுமையாக தாக்கிப் பேசியதோடு, பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளை 'வேகவைத்த முட்டை' என்று அழைத்தது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

2008ஆம் ஆண்டில் தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தாலும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு 2021ஆம் ஆண்டில் வெளியான 'தலைவி' மூலம் பரவலாகப் பேசப்பட்டவர் கங்கனா ரனாவத்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளும் கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசால் பத்ம விருது, தேசிய விருதுகளோடு, ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. காரணம் பாஜக நிர்வாகிகளை விட எதிர்கட்சிகளுக்கும் அதிரடி பதில்களை அளிப்பவர் தான் கங்கனா.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

அரசியல் தாண்டி சினிமா குறித்த பல அதிரடி கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் கங்கனாவின் வழக்கம். பாலிவுட் சினிமாவிம் நெபோடிசம் எனப்படும் பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் பட வாய்ப்புகள் விளம்பரம் பற்றிய அவரது கருத்துகளால் அடிக்கடி பல விவாதங்களும் எழுவது வழக்கம்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இந்நிலையில் தற்போது தனது கருத்தால் பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் கங்கனா. பாலிவுட்டை விட தற்போது தென்னிந்திய சினிமா வெற்றிபெற்று வருவதாகப் பேசிய அவர், முன்னணி நடிகர் அல்லது நடிகைகளாக அடிக்கடி திரைப்படங்களில் காட்டப்படும் பாலிவுட் நட்சத்திரங்களில் வாரிசுகளோடு பார்ப்பது ரசிகர்களுக்கு கடினமாக இருப்பதால் தான் பாலிவுட் படங்கள் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறினார்.

வேக வைத்த முட்டை

வேக வைத்த முட்டை

மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள் வித்தியாசமாகவும் வேகவைத்த முட்டைகளைப் போலவும் இருப்பதாகவும் கங்கனா கூறினார். அதில், "பாலிவுட் நட்சத்திரங்களின் குழந்தைகள் படிப்பை முடிக்க வெளிநாடு செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் முட்கரண்டி மூலம் மட்டுமே சாப்பிட்டு வித்தியாசமாக பேசுகிறார்கள். எனவே, அவர்கள் எவ்வாறு இந்திய ரசிகர்களுடன் இணைவார்கள்?

மக்களுடன் தொடர்பு

மக்களுடன் தொடர்பு

பல பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் வேகவைத்த முட்டைகளைப் போலவும் வித்தியாசமாகத் தெரிகின்றனர். அவர்களின் முழு தோற்றமும் மாறிவிட்டது, அதனால் மக்களுடன் அவர்களும் தொடர்பு கொள்ள முடியாது. நான் யாரையும் ட்ரோல் செய்ய விரும்பவில்லை என்றும் கங்கனா கூறியுள்ளார். தென்னிந்திய படங்கள் குறிப்பாக அல்லு அர்ஜுனின் புஷ்பா: தி ரைஸின் படத்தை மேற்கோள் காட்டிய கங்கனா, அந்த படம் ஏன் பிளாக்பஸ்டர் ஆனது என்பதையும் விளக்கினார்.

தென்னிந்திய சினிமா

தென்னிந்திய சினிமா

புஷ்பா எல்லோருடனும் பழகக்கூடிய ஒருவரைப் போல தோற்றமளித்ததாகவும், புஷ்பா நமக்குத் தெரிந்தவரைப் போல் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். ஒவ்வொரு சாதாரண தொழிலாளி கூட புஷ்பா கேரக்டருடன் தொடர்பு கொள்ள முடியும். தென்னிந்தியத் திரையுலகினரின் அடிப்படையான இயல்பு அவர்களுக்கு பலனைத் தருகிறது. அவர்கள் மேற்கிலிருந்து உத்வேகம் பெறத் தொடங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். உங்கள் நாட்டிலுள்ள மக்களுடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்றும் கங்கனா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+