"ராசியில்லா ராஜா'- அமேதியை மீண்டும் கை கழுவிய 'இந்திரா' காந்தி குடும்பம்- தொகுதி மாறிய ராகுல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று அறிவித்தது காங்கிரஸ். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடவில்லை. தாய் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப் பதிவு மே 20-ந் தேதி நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் நேரு - இந்திரா குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு மே 20-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

After 1996 Congress picks up Non Nehru-Gandhi Family member for Amethi

இழுபறிக்கு பின் அறிவிப்பு: அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் பெரும் இழுபறி நீடித்தது. அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார்; ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அமேதியில் கிஷோரி லால் சர்மா, ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

அமேதி தொகுதி: அமேதி லோக்சபா தொகுதியில் அமேதி, ஜெகதீஷ்பூர், கவுரிகஞ்ச் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1967, 1971 தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ் வென்றது. ஆனால் 1977 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

அமேதியில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி: 1980-ல் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி போட்டியிட்டு எம்பியானார். பின்னர் அவர் விமான விபத்தில் இறந்துவிட இந்திரா காந்தியின் மற்றொரு மகன் ராஜீவ் காந்தி இதே தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 1981, 1984, 1981, 1989, 1991-ல் ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்றார். 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சதீஷ் சர்மா போட்டியிட்டு வென்றார். 1996 தேர்தலிலும் சதீஷ் சர்மா வென்றார். ஆனால் 1998-ல் முதல் முறையாக அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. 1996-ல் அமேதி தொகுதியில் பாஜகவின் சஞ்சய் சிங் போட்டியிட்டு எம்பியானார்.

அமேதியில் சோனியா: 1999-ம் ஆண்டு அமேதி தொகுதியில் இந்திரா காந்தியின் மருமகள்- ராஜீவ் காந்தி மனைவி போட்டியிட்டு வென்றார். 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் சோனியா காந்தியே வென்றார்.

அமேதியில் ராகுல்: 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் இந்திராவின் பேரனும் ராஜீவ்- சோனியா மகனுமாகிய ராகுல் காந்தி போட்டியிட்டு முதல் முறையாக வென்றார். 2014 லோக்சபா தேர்தலிலும் அமேதியில் ராகுல் காந்தி வென்று எம்பியானார்.

தோற்றுப் போன ராகுல் காந்தி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். 2019-ல் பாஜகவின் ஸ்மிருதி இரானி வென்றார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் ஸ்மிருதி இரானி. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானி 468,514 (49.71%) வாக்குகளைப் பெற்றார். ராகுல் காந்திக்கு 413,394 (43.84%) வாக்குகள் கிடைத்தன. பாஜகவின் ஸ்மிருதி இரானி 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இது நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக்கு பெரும் பின்னடைவானது.

கே.எல்.ஷர்மா: தற்போது அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ராகுல் காந்தி, அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவர் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை நேரு- இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் அமேதியில் போட்டியிடாமல் கேஎல் ஷர்மா, காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேரு-இந்திரா குடும்பத்தின் நீண்டகால விசுவாசியான கேஎல் ஷர்மாவுக்கு அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பஞ்சாப் லூதியானாவை சேர்ந்தவர் கேஎல் ஷர்மா. 1980களில் இருந்து நேரு குடும்பத்தின் மிக நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருப்பதால் இம்முறை அமேதி தொகுதியில் கேஎல் ஷர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+