காங்கிரஸுக்கு இனிமே தான் சிக்கலே.. பீகார் தேர்தலால் ராகுலுக்கு பிரஷர்! பலமாகும் பாஜக.. பரபர ட்விஸ்ட்
டெல்லி: பீகார் சட்டப்சபைத் தேர்தலில் சந்தித்த மோசமான தோல்வியிலிருந்து இன்னும் மீளாத காங்கிரஸ், தற்போது மாநிலங்களவைத் தேர்தல்களிலும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கண்ட தேர்தல் தோல்விகள், அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலத்தை பெரிதும் சுருக்கி விட்டது. இந்த சூழலில் பீகாரிலும் ஏற்பட்ட இழப்பு, காங்கிரஸ் கட்சியை மாநிலங்களவையில் மேலும் பலவீனப்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை பாஜக ஜேடியூ கூட்டணி வென்றது. ஆர்ஜேடி -காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளுக்குள் சுருங்கி போனது.
ஆரம்பத்திலேயே ஆர்ஜேடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில், அக்கட்சியிடம் 61 தொகுதிகளை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பீகார் தேர்தல்
அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் மாநிலங்களவை எம்பிகளுக்காக மொத்தம் 75 இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றில் பல மாநிலங்களில் அதாவது பிகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றி காங்கிரஸுக்கு போதிய அளவு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. இதன் காரணமாக, அந்தக் கட்சி வெற்றியைப் பெற கூட்டணி கட்சிகளை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
காங்கிரஸ் தோல்வி
தற்போதைய அரசியல் கணக்குகள் படி, கர்நாடகத்தில் மூன்று, தெலங்கானாவில் இரண்டு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் ஹிமாச்சலில் தலா ஒரு இடம் காங்கிரஸுக்கு கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது. எனினும், இவை எல்லாம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மற்றும் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய் சிங், சக்திசிங் கோஹில் போன்றோர் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
மாநிலங்களவை தேர்தல்
மூத்த வழக்கறிஞரும் பிரபல காங்கிரஸ் பேச்சாளருமான அபிஷேக் மனு சிங்வியின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைகிறது. பல முக்கிய வழக்குகளில் கட்சிக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் அவருக்கு, மீண்டும் மாநிலங்களவை சீட்டு நிச்சயம் வழங்கப்படும் என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மறுபுறம், கர்நாடகத்தில் மூன்று இடங்கள் கிடைக்கக்கூடிய சூழல் இருப்பதால், அதில் ஒன்றில் கார்கே போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி
இந்நிலையில், மூத்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், இளம் முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் காங்கிரஸுக்குள் எழுந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் நிலைமை இன்னும் சிக்கலாக உள்ள. அங்கு காங்கிரஸ் தனித்து வெற்றி பெற வாய்ப்பே இல்லை. மேலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவும் அவசியம். ஆனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான இடங்களை அதிகமாகக் கேட்கும் சூழல் உருவாகியுள்ளதால், காங்கிரஸ் கட்சி பேரம் பேசுவதற்கே கூட பலமற்றதாகி விட்டது.
காங்கிரஸ் நெருக்கடி
அடுத்த ஆண்டு ஏப்ரலில் மகாராஷ்டிரத்தில் ஏழு மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன. அதில் சரத் பவார், பிரியங்கா சதுர்வேதி, ராம்தாஸ் அதாவலே ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் ஒரு இடத்திற்கே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பீகார் தோல்விக்கு பின்னர், மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடம் வலுவாக பேரம் பேசவும், கூடுதல் இடங்கள் கேட்கவும் காங்கிரஸுக்கு வழியில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது காங்கிரஸ் மேலிடத்தை மேலும் அழுத்தத்தில் தள்ளியுள்ளது. மேலும், பீகாரில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மாநிலங்களவையில் கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்பு அதிகம். இது காங்கிரஸின் பலத்தை அடுத்த சில ஆண்டுகளில் மேலும் குறைக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications