கைநழுவிய CM பதவி.. மபி மாஜி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பாஜகவில் முக்கிய பதவி? என்ன தெரியுமா
டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு இந்த முறை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசிய நிலையில் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 163 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் சிவ்ராஜ்சிங் சவுகான் முதல்வராக நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜக பெரிய ட்விஸ்ட் வைத்தது. அதாவது மத்திய பிரதேசத்தின் முதல்வராக மோகன் யாதவை தேர்வு செய்து பொறுப்பேற்க வைத்தது. இதன்மூலம் 4 முறை சுமார் 17 ஆண்டுகளாக முதல்வராக செயல்பட்ட சிவ்ராஜ் சவுகான் ஒதுக்கப்பட்டார். இதன்மூலம் சிவ்ராஜ்சிங் சவுகானின் முதல்வர் கனவு பறிபோனது. அதோடு அவர் மேலிட தலைவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.
‛‛மன்னித்து விடுங்கள்’’.. மபி மாஜி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நீதிபதிக்கு பரபர கடிதம்! பின்னணி
இந்நிலையில் தான் முதல்வர் பதவி கைநழுவிய நிலையில் முதல் முறையாக சிவ்ராஜ்சிங் சவுகான் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அவர் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி இருவரும் பேசியுள்ளார். அதோடு மத்திய பிரதேச முதல்வராக சிவ்ராஜ்சிங் சவுகானை நியமிக்காததன் பின்னணி பற்றி ஜேபி நட்டா எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சிவ்ராஜ்சிங் சவுகான், ‛‛நான் மத்திய பிரதேச மாநில அரசியல் அல்லது மத்திய அரசியல் என 2ல் எங்கு இருக்க வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். பெரிய பொறுப்புகளில் பணியாற்ற வேண்டும் என்றாலும் அதனை கட்சி தான் முடிவெடுக்கும். கட்சி முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்’’ என்றார். இந்நிலையில் தான் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மத்திய பிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்த அவர் தான் இந்த தேர்தல் வெற்றிக்கு காரணமானவர்களில் அவரும் முக்கியமானவர். இதனால் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பாஜகவின் தேசிய துணை தலைவர் பதவி என்பது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்து பாஜகவில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்த அனுபவம் கொண்டவர். மேலும் அவர் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். அந்த வகையில் அவருக்கு இத்தகைய பொறுப்பு வழங்குவது என்பது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம் என கூறப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் அவரை செயல்பட வைக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றலாம் என பாஜக நம்புகிறது. முன்னதாக சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் பதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்க திட்டமிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பில்லை.
மாறாக அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவ்ராஜ்சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் விதிஷா லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம். இந்த தொகுதியில் இருந்து அவர் 4 முறை எம்பியாக இருந்த நிலையில் மீண்டும் அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அதோடு அடுத்த முறை பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என கூறப்படுகிறது.
-
அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர் -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன












Click it and Unblock the Notifications