40 பேர் ரயிலில்.. திடீரென வீசப்பட்ட பெட்ரோல் குண்டு.. வெடித்த "அக்னி பாத்" போராட்டம்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் வெடித்துள்ளது. தென்னிந்தியாவில் போராட்டம் நடக்காமல் இருந்த நிலையில் இன்று தெலுங்கானாவிலும் மாபெரும் போராட்டம் வெடித்தது. அங்கு ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்னி பாத்

அக்னி பாத்

அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

போராட்டம்

போராட்டம்

இந்த நிலையில்தான் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் 4 வருடம் பணியாற்றிய பின் 11.7 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும். ஆனால் இதில் பென்சன் கிடையாது. அதேபோல் 25 சதவிகிதம் பேர் தான் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். 4 வருடம் கழித்து 75 சதவிகிதம் பேர் வேலையின்றி வெளியேறும் நிலை ஏற்படும்.

 போராட்டம் ஏன்?

போராட்டம் ஏன்?

இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாடு முழுக்க ரயில் நிலையங்களிலும், சாலைகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன. . தென்னிந்தியாவில் போராட்டம் செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று தெலுங்கானாவிலும் மாபெரும் போராட்டம் வெடித்தது. அங்கு செகந்தராபாத்தில் உள்ள ரயில்வே முனையத்தில் ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. அங்கு ரயில் ஒன்று ஸ்டேஷனில் நின்று கொண்டு இருந்த போது அதன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

உயிர் சேதம் தவிர்ப்பு

உயிர் சேதம் தவிர்ப்பு

இதில் ரயில் பெட்டி தீ பற்றி எரிந்தது. அப்போது ரயிலில் வெவ்வேறு பெட்டிகளில் 40 பேர் இருந்துள்ளனர். ரயில் சரியாக புறப்படும் நேரத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருந்த பெட்டிகளில் அதிர்ஷ்டவசமாக குண்டு வீசப்படவில்லை. அதே சமயம் இவர்கள் இருந்த பெட்டிகளை நோக்கி வேகமாக தீ பரவியது. அதற்குள் உள்ளே இருந்த எல்லோரும் உடனே மீட்கப்பட்டு, ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் நிலையம் சூறையாடப்பட்டது

ரயில் நிலையம் சூறையாடப்பட்டது

இதையடுத்து போராட்டக்காரர்களால் அந்த ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. அங்கு வந்த போலீசார் லத்தி தாக்குதல் நடத்தினர். ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் காயம் அடைந்ததில் ஒருவர் பலியாகிவிட்டதாகவும், 8 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பதற்றம்

பதற்றம்

இந்த போராட்டம் காரணமாக நாடு முழுக்க 200 ரயில்கள் பல இடங்களில் முடங்கி நின்று உள்ளன. 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில் சேவைகள் சுருக்கப்பட்டு உள்ளன. இன்று பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் தலா இரண்டு ரயில்கள் சூறையாடப்பட்டன. இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள் என்று கூறி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

என்ன காரணம்

என்ன காரணம்

இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று அக்னி வீர் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளன. இதன் காரணமாகவே இந்த திட்டத்திற்கு எதிராக நேற்றும் இன்றும் இளைஞர்கள் பலரால் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+