"ஓபிஎஸ்-க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமையும்" தெம்பாக சொல்லும் புகழேந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரித்திரம் வாய்ந்ததாகவும் ஓபிஎஸ்க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகவும் அமையும் என புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

அப்போது ஒபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கபப்ட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பொதுக்குழுவுக்கே உச்சப்பட்ச அதிகாரம்

பொதுக்குழுவுக்கே உச்சப்பட்ச அதிகாரம்

அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது. இதில் அதிமுகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்பன உள்பட பல முக்கியமான வாதங்கள் வைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற்று வருகிறது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் வாத பிரதிவாதங்களை அதிமுக தொண்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

 புகழேந்தி பேட்டி

புகழேந்தி பேட்டி

இந்த நிலையில், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாகவும் ஓபிஎஸ்க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகவும் அமையும் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகழேந்தி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- எந்த உச்ச பட்ச அதிகாரமும் பொதுகுழுவுக்கு கிடையாது. 10 பேர் முன்மொழிய வேண்டும் 10 பேர் வழிமொழிய வேண்டும் என்று இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர் எங்கே சொல்லியிருக்கிறார்.

 சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக

சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக

பொதுச்செயலாளர் பதவியை அடைய துடிப்பவர் சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி. தற்போது நீதிமன்றத்தை ஏமாற்ற பார்க்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. உச்ச நீதிமன்றம் கண்கள் திறந்து விட்டது. எல்லா கேள்விகளையும் கேட்டு இருக்கிறார்கள். ஏமாற்ற முடியாது. இந்த தீர்ப்பு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக ஓபிஎஸ்க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகவும் அதிமுக காப்பாற்ற பட போகின்ற தீர்ப்பாகவும் அமையும்.

லவ் லெட்டரா அனுப்பியது

லவ் லெட்டரா அனுப்பியது

தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு நாங்கள் செல்கிறோம். யார் என்பதை ஓபிஎஸ் அறிவிப்பார். நாங்கள் யாராவது ஒருவர் அதில் கலந்து கொள்வோம். அவர்கள் செய்வது போல புறக்கணிக்க முடியாது. தேர்தல் ஆணையம் என்ன லவ் லெட்டரா அனுப்பியது. அங்கே இருந்து அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்புகிறார்கள். இது மாதிரி ஒரு அரசியல் கட்சியை பார்த்து இருக்கிறீர்களா? வாங்கிவிட்டு பதில் சொல்ல வேண்டும். இதை ஏற்க மறுத்து அனுப்புகிறார்.

அவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம்

அவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம்

இவர் நாளைக்கு எப்படி தேர்தல் ஆணையம் முன்பாக நிற்பார். திமிறு பிடித்த நபர்.. இப்படியான ஒரு கட்சி என தேர்தல் ஆணையம் முத்திரையை குத்திவிடாதா? இருக்கிற கோபத்தில் திருப்பி அனுப்புகிறார். ஆகவே ஆத்திரப்படுகிறார்... அவசரப்படுகிறார்... அதிமுகவை அடியோடு அழிக்க முயல்கிறார். இதன் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக தனது பேட்டியின் போது தமிழக ஆளுநர் அவையில் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் புகழேந்தி கூறினார்.

ஓபிஎஸ் கூறியது போல

ஓபிஎஸ் கூறியது போல

இது தொடர்பாக புகழேந்தி கூறுகையில், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும். ஆளுநர் வெளிநடப்பு செய்வதை இப்போதுதான் பார்க்கிறோம். தினம் இதே பிரச்சினையாக செல்கிறது. எங்களது கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியது போல ஆளுநரின் அறிக்கை மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் வாசிப்பிலே அவையெல்லாம் இடம் பெறவில்லை.

எங்கே போய் முடிவு அடையும்

எங்கே போய் முடிவு அடையும்

இந்த தகராறை நிறுத்திக் கொண்டால் நல்லது. ஆளுநரும் திராவிட இயக்க தலைவர்களின் பெயரை சொல்லாதது வேதனை அளிக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இப்படி தகராறு நீண்டு கொண்டே போகுமேயேனால் அது எங்கே போய் முடிவு அடையும் என்பது புரியாத விஷயமாக உள்ளது. ஓபிஎஸ் இவ்விவகாரத்தில் மிகத்தெளிவாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+