பறந்த உத்தரவு.. டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த திடீர் தடை.. என்ன காரணம்?
டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை விதித்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது... மேலும் ஒலி பெருக்கிகள், முழக்கங்கள் மூலம் ஒலி எழுப்பவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் கடந்த சனிக்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்... பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
ஆனால், பிரதான ஆபரேஷன் தியேட்டரில், பணியாளர் பற்றாக்குறை குறித்து செவிலியர்கள் குழு நடத்திய போராட்டத்தின் விளைவாக, கிட்டத்தட்ட 50 திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன...

நர்ஸ்கள்
எனவே, நர்ஸ்கள் குழு நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் செவிலியர் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ் குமார் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... ஹரிஷ் கஜ்லா இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

உள்ளிருப்பு போராட்டம்
அந்த வகையில், இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.. செவிலியர் சங்கத் தலைவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியும் செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.. மேலும் ஊதிய உயர்வு, போதிய அளவு பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்..

திடீர் ஆர்ப்பாட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பரபரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி எழுப்பும் தடை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஒலிபெருக்கி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட யாருக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அத்துடன், இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications