ஐயோ போச்சே.. துருக்கி - அஜர்பைஜானுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. GJC வெளியிட்ட மேஜர் அறிவிப்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு எதிராக அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை கவுன்சில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் இடையேயான அனைத்து வர்த்தக உறவுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துருக்கி, அஜர்பைஜானில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் நம் நாட்டின் சுற்றுலா பயணிகளும் இருநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க தொடங்கி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு துருக்கி, அஜர்பைஜானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த உள்ளது.
நம் நாட்டு மக்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளனர். இருநாடுகளும் சுற்றுலா துறைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து துருக்கி, அஜர்பைஜானுக்கு ஏராளமான மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். ஆனால் இப்போது இருநாடுகளுக்கும் மக்கள் சுற்றுலா செல்ல போட்ட திட்டத்தை கேன்சல் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது தான். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின்போது துருக்கி,அஜர்பைஜான் ஆகியவை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன. அதோடு பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்த நம் நாட்டை கண்டித்தன.
இதனால் துருக்கி, அஜர்பைஜானுக்கு பாடம் புகட்டும் நோக்கில் மக்கள் அந்த நாடுகளை புறக்கணித்து வருகின்றனர். அதேபோல் புனே வியாபாரிகள் சங்கம் துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை ரத்து செய்துள்ளன. அதேபோல் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மார்பிள் கல் தொடர்பான வர்த்தகத்தை கைவிடுவதாக உதய்ப்பூர் மார்பிள் புராசசர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அந்த வரிசையில் இப்போது இணைந்து இருப்பது தான் சிஜேசி எனும் அகில இந்திய ரத்தினம் மற்றும் நகைக்கான உள்நாட்டு கவுன்சில் ( CJC அல்லது All India Gem and Jewellery Domestic Council).
அதாவது துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் உள்ள வர்த்தக தொடர்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று அகில இந்திய ரத்தினம் மற்றும் உள்நாட்டு கவுன்சில் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவர் கூறியதாவது: "இந்திய ரத்தினம் மற்றும் நகைத் துறை நம் நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்க முடிவு எடுத்துள்ளது. வர்த்தகத்தை விட நாட்டின் பாதுகாப்பு, நலன் தான் முக்கியம். இதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் முன்மாதிரி அமைப்பாக இருக்க முடியும். இதனால் துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் அனைத்து வர்த்தக தொடர்பையும் நிறுத்தும்படி நகைக்கடைக்காரர்கள், நகை உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதை செய்வதன் மூலம் துருக்கி, அஜர்பைஜானுக்கு நம்மால் முக்கிய செய்தியை அனுப்ப முடியும். இந்திய நாட்டின் தூணாக இருக்கும் தொழில்துறை இருநாடுகளுக்கு எதிரான ஒற்றுமையை வலுப்படுத்துவதை காட்ட முடியும். இதனால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications