ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா?
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஈரான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார். "கடற்பயணம் இடையூறு இன்றி இருப்பதன் முக்கியத்துவம் மற்றும் கப்பல் பாதைகள் தொடர்ந்து திறந்து இருப்பதும் அதன் பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன்" என மோடி கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் மெசூத் பெஸஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஈரான் அதிபர் மெசுத் பெசஸ்கியானுடன் பேசினேன்.

அவருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலம் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினோம். மேற்கு ஆசியாவில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தேன்.
இந்த தக்குதல் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் சர்வதேச விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கடற்பயணம் இடையூறு இன்றி இருப்பதன் முக்கியத்துவம் மற்றும் கப்பல் பாதைகள் தொடர்ந்து திறந்து இருப்பதும் அதன் பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன்" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் மற்றும் எரிவாயு ஏற்றுமதி இந்த வழியாகவே நடைபெறுகிறது. ஓமன் மற்றும் ஈரான் இடையே உள்ள குறுகிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதால், உலக அளவில் 20 சதவீதம் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவே தனது இறக்குமதியில் 40 சதவீதத்தை அந்த ரூட்டில்தான் செய்கிறது என்பதால், இந்தியாவுக்கு பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. 50 சதவீத எல்.என்.ஜி கேஸ் விநியோகமும் இந்த ரூட்டில்தான் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications