நிர்மலா சீதாராமனை திடீரென்று சந்தித்த பிடிஆர்! கருத்து மோதல்களுக்கு நடுவே மீட்டிங்.. இதுதான் காரணம்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழக அரசை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த நிலையில் மாநில நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக கருத்து மோதல்கள் வெடித்த நிலையில் இன்று டெல்லியில் நிர்மலா சீதாராமனை, பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த திங்கட்கிழமை விலைவாசி உயர்வு குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்பி கனிமொழி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் உள்ளிட்டவற்றறை சுட்டிக்காட்டி கனிமொழி மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். மேலும், ‛‛திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக கூறிய நிலையில் அதனை செய்யவில்லை. ஆனால் கடந்த 6 மாதத்தில் மத்திய அரசு 2 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் ஜிஎஸ்டியை காரணம் காட்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கூறினார். மேலும் ஜிஎஸ்டிி வரி விதிப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இதில் தமிழக நிதி அமைச்சரும் உள்ளார்'' என்றார்.

பழனிவேல் தியாகராஜன் பதிலடி
இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், மத்திய நிதியமைச்சர் கூறியது கால்வாசி உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு பலமுறை வரி உயர்த்தியது. இதனால் மத்திய அரசின் வரிவருவாய் பல லட்சம் கோடி உயர்நதாலும் தற்போதைய விலை குறைப்பு என்பது போதாத நிலையில் தான் உள்ளது என சாடினார். மேலும் ஜிஎஸ்டி தொடர்பாகவும் அவர் பதிலளித்து இருந்தார்.

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென்று இன்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக கருத்து மோதல்கள் நடந்த நிலையில் திடீரென்று இருவரும் சந்தித்து கொண்டது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. மேலும் இந்த சந்திப்பின் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுந்தது. மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில் 48வது கூட்டம்
அதாவது கடந்த ஜூன் மாத இறுதியில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மதுரையில் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தமிழக அரசு சார்பில் பழனிவேல் தியாகராஜன் வைத்த கோரிக்கையை ஏற்று இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Recommended Video

திட்டமிட்டதில் சிக்கல்
இந்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர், 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் உள்ளிட்டவற்றால் ஜிஎஸ்டி கூட்டம் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் நடத்திவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தான் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications