என்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா?.. அப்படி என்ன ஸ்பெஷல்?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்!
டெல்லி: உலகிலேயே விலையுயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் உள்ள ஸ்கூபி கபேயில் விற்பனை செய்யப்படுகிறதாம். பிளாக் டயமன்ட் எனும் இந்த ஐஸ்கிரீம் ரூ 60 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி இந்த ஐஸ்கிரீமில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம். ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
இந்த ஐஸ்கிரீம்கள் காலத்திற்கேற்ப பல்வேறு சுவைகளில் வருகின்றன. இலைகளில் கொடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் முதல் கண்ணாடி கப்புகளில் கொடுக்கப்படும் ஐஸ்கிரீம்கள் வரை பலர் தங்கள் வயது மூப்பு அடிப்படையில் பார்த்திருப்பர்.

விலைமதிப்பு
ஐஸ்கிரீமிற்கென்றே தனி பார்லர்கள் திறக்கப்பட்டு அதில் 50-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நிலையில் துபாயில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60000 என சொல்லப்படுகிறது. ஸ்கூபி கபே எனும் கடையில் விற்பனை செய்யப்படும் இந்த ஐஸ்கிரீம்தான் உலகிலேயே விலைமதிப்பு மிக்க ஐஸ்கிரீம் ஆகும்.

தங்க இழைகள்
தங்கத்திற்கு இணையாக விற்கப்படும் இந்த ஐஸ்கிரீமில் அப்படி என்னதான் இருக்கிறது என்றால், தங்க இழைகள் இருக்கின்றனவாம். துபாயில் ஸ்கூபி கபே எனும் ஹோட்டலில் 23 காரட் தங்க இழைகள் கொண்டு இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது.

இத்தாலி
மடகாஸ்கர் வெண்ணிலா, இத்தாலியன் பிளாக் டிரபிள்ஸ் எனப்படும் அரியவகை பொருட்கள் மூலம் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் 23 காரட் தங்க இழைகள் சேர்ப்பதும் கூடுதல் சுவையை அளிக்கிறதாம்.

சில்வர் ஸ்பூன்
60 ஆயிரம் கொடுத்து வாங்கும் ஐஸ்கிரீமை வெறும் குச்சியாலோ எவர்சில்வர் ஸ்பூனினாலோ சாப்பிட்டால் சரியாக இருக்காது. இதனால் அந்த தங்க ஐஸ்கிரீமை சாப்பிட வெள்ளி ஸ்பூன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து நடிகையும் டிராவல் பிளாகருமான ஷெனாஸ் டிரஷரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கடையில் தங்க கப்புசினோ, பர்கரும் கிடைக்கும்.

18 லட்சம்
பணத்தால் வாங்க முடியாதது ஏதாவது இருக்கிறதா, 60 ஆயிரம் ரூபாய்க்கு ஐஸ்கிரீம், தங்கத்தை சாப்பிடுவது துபாயில்தான் கிடைக்கும் என நடிகை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஐஸ்கிரீம் உலகில் விலைமதிப்பான ஐஸ்கிரீம் என சொல்லப்பட்டாலும் கின்னஸ் உலக சாதனையை பொருத்தவரை நியூயார்க் நகரில் உள்ள ஃப்ரோசன் ஹாட் சாக்லேட் என்ற ஐஸ்கிரீம்தான் மிகவும் விலைமதிப்பானதாம். இதன் விலை 18 லட்சமாம். அம்மாடியோவ்!.. 18 லட்சம் இருந்தால் என்னலாம் வாங்கலாம்?
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications