முகேஷ் அம்பானி, அதானியெல்லாம் ஓரம்போ! யார் இந்த ரமேஷ் பாபு! கோடிகளில் புரளும் பார்பர்!
டெல்லி: உலக கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா உள்ளிட்டோரிடம் கூட அவ்வளவு கார் இல்லை. ஆனால் முடித் திருத்தும் தொழிலாளியிடம் மாருதி ஆம்னி முதல் பிஎம்டபிள்யூ வரை இருக்கிறது.
இந்தியாவில் பல கோடீஸ்வரர்கள் தங்கள் தொழில் சம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறார்கள். இதனால் பலர் பணக்காரர்களாக உள்ளனர். அந்த வகையில் அவர்கள் பெரிய பங்களாக்களையும் வீடுகளையும் சொந்தமாக வைத்துள்ளனர்.

அது போல் பெரிய பெரிய கார்களை வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்தான் ரமேஷ் பாபு. அவரிடம் 400 கார்கள் உள்ளன. இவர் முடித்திருத்தும் தொழிலாளியாக இருந்தவர்.
தற்போது தொழிலதிபர். இவரிடம் மினி மெர்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாக்குவார் கார்கள் உள்ளிட்டவை வைத்திருக்கிறார்கள். ரமேஷ் பாபு ரமேஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் கம்பெனியை பெங்களூரில் நடத்தி வருகிறார். இவர் 30 ஆண்டுகளாக சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு மாருதி ஆம்னி காருடன் தனது தொழிலை ரமேஷ் பாபு தொடங்கினார். இன்று இந்தியாவின் கோடீஸ்வர முடி திருத்தும் தொழிலதிபராக உள்ளார். 1979 ஆம் ஆண்டு அவருடைய தந்தை மறைந்தவுடன் அவரும் அவரது குடும்பத்தினரும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்தனர்.
அவரது தந்தை இறந்த போது ரமேஷுக்கு 7 வயது. அவருடைய தந்தை கோபால் பெங்களூரில் பிரிகேட் சாலையில் ஒரு முடி திருத்தும் கடையை நடத்தி வந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு அந்த கடையை ரமேஷின் மாமா எடுத்து நடத்தி வந்தார். தினமும் அந்த குடும்பத்திற்கு ரூ 5 கொடுத்து வந்தார். இதையடுத்து தனது குடும்ப வறுமைக்காக 13 வயதில் ரமேஷ் பாபு பேப்பர் போடுவது பால் போடுவது என செய்தார்.
அதே வேளையில் படிப்பதையும் படித்து வந்தார். இதையடுத்து அவருடைய மாமாவிடம் இருந்து சலூன் கடையை பெற்று கொண்டார். ஒரே ஆண்டில் தொழிலில் அமோகமாக வந்தார். இந்தியாவிலேயே 400 கார்களை கொண்ட நபர் இவர்தான். அதாவது முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கவுதம் அதானி ஆகியோரிடம் கூட இத்தனை கார்கள் இல்லை என்கிறார்கள்.
ரமேஷ் பாபுவின் சொத்து மதிப்பு ரூ 1200 கோடி ஆகும். 30 ஆண்டுகளாக விலை மதிப்புள்ள கார்களை அவர் சேகரித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications