"பெட்ரோல், டீசல் விலை.." ஹேப்பி நியூஸை அள்ளி தந்த ஆனந்த் சீனிவாசன்.. ஆனாலும் ஒரு பேராபத்து இருக்கு
டெல்லி: வரும் காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் இதனால் பெட்ரோல், டீசல் விலையும் எப்படி மாறுபடும் என்பது குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வருகிறது. எப்போதும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படும்.

இந்தியாவில் கடைசியாகக் கடந்த மே மாதம் பெட்ரோ, டீசல் விலையில் மாற்றம் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், மாற்றம் இல்லாமலேயே தொடர்ந்து வருகிறது.
கடந்தாண்டு பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்ட போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 75 டாலராக இருக்கிறது. இருப்பினும், கடந்தாண்டு கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போது பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ததால், அந்த லாபத்தில் இருந்து மீளும் வரை அதன் விலை குறைக்கப்படாது என்றே தெரிகிறது.
இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்... மின்சார வாகனங்களின் வருகை இதை எப்படிப் பாதிக்கும் என்பவை குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சமீபத்திய வீடியோவில் விளக்கியுள்ளார். அதில் அவர், "உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் வட்டி விகிதத்தை ஏற்றினால் கச்சா எண்ணெய் நுகர்வு நிச்சயம் குறையும். பொருளாதாரம் பாதிக்கப்படும்.

அதேபோல இதில் மற்றொரு பிரச்சினையும் வந்து சேர்ந்துவிட்டது. அது மின்சார வாகனங்கள். வரும் காலத்தில் மின்சார வாகனங்களும் நிச்சயம் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சந்தேகமே இல்லை. உலகளவில் பார்க்கும் போது ஏற்கனவே சீனாவில் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. மற்ற நாடுகளிலும் விரைவில் மின்சார வாகனங்களை முக்கிய இடத்தை பிடிக்கும். இன்னும் 10 ஆண்டுகளில் இது மேலும் வளர்ச்சியடையும்.
2033இல் சர்வதேச அளவில் சுமார் 70% வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை 2030க்குள் டூ வீலரில் 40% மின்சார வாகனங்களாக இருக்கும். கார் அதிகபட்சம் 15 முதல் 17% இருக்கும். காரை பொறுத்தவரை இந்தியாவில் டாடா, ஹூண்டாய் மட்டுமே மின்சார கார்களில் கவனம் செலுத்துகிறது. ஹூண்டாய் விலை அதிகம். டாடா மட்டுமே ஒரு ஆளாக இருக்கும். ஒரே நிறுவனத்தால் அதிகளவில் சந்தையைப் பிடிக்க முடியாது என்பதாலேயே 15% என்கிறேன். ஆனால், இந்திய டூ வீலர் தான் முக்கியம்..

பஜாஜ், டிவிஎஸ், ஹூண்டாய், ஹீரோ, ஏத்தர், ஓலா எனப் பல நிறுவனங்கள் உள்ளன. எனவே நமது நாட்டில் மின்சார டூ வீலர் சந்தை மிக வேகமாக வளர்ச்சியடையும்" என்று அவர் தெரிவித்தார். அதாவது இன்னும் சில ஆண்டுகளில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதனால் கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதன் விலையும் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பெட்ரோல் டீசல் விலை குறித்து நேரடியாக எதையும் சொல்லவில்லை என்றாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலே தானாக பெட்ரோல், டீசல் விலையும் குறையவே செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்
அவர் இதனால் எந்த துறை பாதிக்கப்படும் என்பது குறித்துப் பேசுகையில், "பெட்ரோல் வாகனங்களில் இருப்பதைப் போல மின்சார வாகனங்களில் பல கருவிகள் இருக்காது. இதனால் வாகனங்களை சர்வீஸ் செய்யவும் தேவையில்லை. இதனால் டீலர்களின் லாபமும் குறையும். மின்சார வாகனங்கள் அதிகரிக்கும் போது, வாகனங்களை விற்பனை செய்யும் போது மட்டும் லாபம் கிடைக்கும்.
டெஸ்லா இப்போது டீலர்கள் இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்கிறது. இந்தியாவில் டூ வீலரில் அதேபோல வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கார் விற்பனை எப்படி இருக்கும் எனத் தெரியாது. எனவே வரும் காலத்தில் டீலர்களும் குறைவார்கள். இதனால் புதிதாக டீலர்ஷிப்பை யாரும் எடுக்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications