பாஜகவுடன் கூட்டணிக்கு போட்டி? சந்திரபாபுவை தொடர்ந்து ஜெகன்மோகனும் டெல்லி விசிட்! மோடியுடன் சந்திப்பு
டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளன. இதனால், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், பாஜக வலுவாக இல்லாத இடங்களில் மாநில கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி - ஜெகன்மோகன் ரெட்டி உடனான சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசியிருக்கிறார். ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 22 இடங்களில் உள்ளது.












Click it and Unblock the Notifications