இனி பிப்.,14 காதலர் தினம் இல்லையாம்.. Cow Hug Dayவாம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. என்னாச்சு?
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாளை காதலர் தினமாக கொண்டாடாமல் ‛Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் பு
டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாளை ‛Cow Hug Day' என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் பிப்ரவரி 14ம் தேதி Cow Hug Day என கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்புக்கு தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. அதோடு கோசாலை உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்துக்கு பதில் பசு அணைப்பு தினம் (Cow Hug Day) கொண்டாட மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வேண்டுகோள்
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நலவாரியம் சார்பில் பொதுமக்களுக்கு திடீரென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விலங்குகள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊட்டமளிக்கும் ‛கோமாதா’
இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தாங்கும் வகையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. இதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் ஊட்டமளிக்கும் பணியை ‛கோமாதா' எனும் பசு மேற்கொண்டு வருகிறது.

பிப்ரவரி 14ல் பசு அணைப்பு தினம்
மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக (Cow Hug Day) தினமாக கொண்டாட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
இதுபற்றி விலங்குகள் நலவாரியத்தின் சட்ட ஆலோசகரான பிக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், ‛‛பசு அரவணைப்பு தினம் என்பது பசுக்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டது. பசுக்களால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்வதற்கான இன்னொரு வழியாகவும் இது பார்க்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் மாறுபவர்களை மெல்ல மீட்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications