அனுராக் தாகூருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு கேபினட் அமைச்சராக பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்திய கிரிக்கெட் முன்னாள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் அனுராக் தாக்கூர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்,

முன்னதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்த தாகூர் மத்திய கேபினட் அமைச்சரவை அமைச்சராக பதவி உயர்வு பெற்று இன்று மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராகி உள்ளார்.

Anurag Thakur appointed new Minister of Youth Affairs and Sports

ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பியான அனுராக் தாக்கூர், ராஷ்டிரபதி பவனில் இன்று நடந்த விழாவில் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

அனுராக் தாகூர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக மே 2016 முதல் பிப்ரவரி 2017 வரை இருந்தார். அதற்கு முன்னதாக அனுராக் தாகூர் பிசிசிஐ வாரிய செயலாளராகவும் இருந்தார்.

தற்போது பாஜகவின் முக்கிய அரசியல் தலைவராகவும் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தையும் (ஹெச்பிசிஏ) கவனித்து வருகிறார். இவரது சகோதரர் அருண் துமால் தற்போது பி.சி.சி.ஐ.யின் பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

"மத்திய அமைச்சரவை அமைச்சராக இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் நான் பெருமைப்படுகிறேன், இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அனுராக் தாகூர் ட்வீட் செய்துள்ளார். கிரேன் ரிஜிஜுவிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கு அனுராக் தாகூர் இப்போது அமைச்சராகி விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+