இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. பாகிஸ்தான் போர் மூலம்.. மிகப்பெரிய விதியை மாற்றிய இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட போர் மூலம் தனது போர் தொடர்பான அரசியல் கொள்கைகளை இந்தியா முழுமையாக மாற்றி உள்ளது. போர் முடிவிற்கு வந்தாலும் இந்தியாவின் போர் அரசியல் கொள்கை பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் போர் கொள்கை மற்றும் விதிகளின் படி, இந்தியா உள்ளே வேறு ஒரு நாடு தாக்குதல் நடத்தினால் இந்தியா போருக்கு செல்லும். இந்தியா சுயமாக யார் மீதும் போர் தொடுக்காது. அதாவது எந்த நாடு மீது இந்தியா முதலில் அட்டாக் நடத்தாது.

ராணுவ தளவாடங்களை தாக்காது. தீவிரவாத தளவாடங்களை தாக்கினால் கூட ராணுவ தளவாடங்களை கைவைக்காது. அதோடு முதல் நாடாக போரை தொடங்காது. மற்ற நாடு போரை தொடங்கினால் அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும்.

ஆனால் இப்போது பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட இந்த 4 நாட்கள் போர் மூலம் தனது போர் தொடர்பான அரசியல் கொள்கைகளை இந்தியா முழுமையாக மாற்றி உள்ளது. போர் முடிவிற்கு வந்தாலும் இந்தியாவின் போர் அரசியல் கொள்கை பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Any terror attacks are considered Act of War India to formally modify its rules of engagement on Pakistan

என்ன கொள்கை மாற்றம்?

இனிமேல் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் முறையாக இந்தியாவிற்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும். அதாவது act of terror என்பதற்கு பதில் இனி act of war என்று மாற்றப்படும். மேலும் பதிலடி அதற்கு ஏற்றபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நம்முடைய நாட்டை ஒரு நாட்டின் ராணுவம் தாக்கினால் மட்டுமே இதுவரை அது போர்.

இனிமேல் ஒரு நாட்டில் செயல்படும்.. உதாரணமாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் நம்மை தாக்கினால் கூட அது பாகிஸ்தான் உடனான போராக கருதப்படும். எந்தவொரு பயங்கரவாதச் செயலும் முறையாக இந்தியாவிற்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும். இதற்கு போர் என்ற அடிப்படையிலேயே பதிலடியும் கொடுக்கப்படும்.

இதுதான் இந்தியாவின் கொள்கை மாற்றம். இந்த கொள்கையை மும்பை தாக்குதலின் போது கூட இதை இந்தியா மாற்றவில்லை. புல்வாமா தாக்குதலின் போது கூட இந்தியா இதை மாற்றவில்லை. ஆனால் இந்த முறை மாற்றி உள்ளனர். இனிமேல் தீவிரவாத தாக்குதல் நடந்தால் அது போர் அறிவிப்பாக பார்க்கப்படும். இப்போது மேற்கொண்டு உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மொத்தமாக முடிவிற்கு கொண்டு வரப்படும்.

போர் முடிவு

பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து இன்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+