அதானியின் APSEZ நிறுவனத்தின் நிகர லாபம் ₹3,120 கோடியாக அதிகரிப்பு! மிக பெரிய சாதனை
டெல்லி: அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹5,550 கோடி EBITDA ஈட்டியுள்ளது. மேலும், அது கடந்தாண்டு உடன் ஒப்பிடும்போது 27% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் துறைகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2026 நிதியாண்டின் முதல் பாதியில், உள்நாட்டுத் துறைமுகங்கள் அதிகபட்சமாக 74.2% EBITDAவை பதிவு செய்துள்ளது. அதேபோல பன்னாட்டுத் துறைமுக ஆபரேஷனும் ₹2,050 கோடி வருவாயையும், ₹466 கோடி EBITDAவை எட்டியுள்ளன. இது வாழ்நாள் சாதனையாகும்.

லாஜிஸ்டிக்ஸ் பிரிவில், 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,224 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 92% வளர்ச்சியாகும். டிரக்கிங் மற்றும் வெளிநாட்டு சரக்கு நெட்வொர்க் சேவைகளின் விரிவாக்கமே இதற்குக் காரணமாகும். லாஜிஸ்டிக்ஸ் பிஸ்னஸின் மூலதன ஈட்டு விகிதம் (RoCE) 6% இல் இருந்து 9% ஆக உயர்ந்துள்ளது.
கடல்சார் துறையில், 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹1,182 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 213% அதிகமாகும்.. புதிய கப்பல்கள் வாங்கியதே இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
இதன் காரணமாக ஃபின்ச் மற்றும் எஸ் & பி குளோபல் APSEZஇன் ரேட்டிங்கை மேம்படுத்தி வழங்கியுள்ளது. Fitch Ratings "நெகட்டிவ்" என்பதில் இருந்து "ஸ்டேபிள்" என மாற்றியுள்ளதுடன், "BBB-" மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. S&P Global, சர்வதேச போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனங்களில் APSEZஐ முதல் 5% பட்டியலில் அங்கீகரித்துள்ளது.
APSEZ இன் ஒருங்கிணைந்த போக்குவரத்துப் பயன்பாட்டு லாபகரமான வளர்ச்சி ஒரு சான்றாக இருப்பதாக அதன் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஸ்வினி குப்தா தெரிவித்தார்.
APSEZ கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளை அறிவித்திருந்தது. அதில் தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அஸ்வினி குப்தா மேலும் கூறுகையில், "லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் வணிகங்கள் தொடர்ந்து அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன, இது எங்கள் சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த லாபம் எங்கள் செயல்பாட்டிற்கான ஒரு சான்று. இதுவரை இல்லாத EBITDAஐ பதிவு செய்து சாதனை படைத்துள்ளோம். 12 லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், 3.1 மில்லியன் சதுர அடி கிடங்குகள், விரிவடைந்து வரும் சரக்கு சேவை போக்குவரத்து என எங்கள் விஷனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த வீரராக எங்களை நிலைநிறுத்துகிறது" என்றார்.
உலக வங்கியின் 2024 ரேங்கிங்கில் முந்திரா துறைமுகம் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு வெஸ்ட் பன்னாட்டு முனையம் ஏப்ரல் 2025இல் செயல்படத் தொடங்கியதில் இருந்து 3.5 லட்சத்திற்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளது. கொச்சியில் ₹600 கோடி முதலீட்டில் 70 ஏக்கர் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
முந்திரா துறைமுகம் ஜூலை 2025இல் 898 இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரயில்களைக் கையாண்டு, சுமார் 46,000 TEUகளை லோட் செய்தது. 2025 செப்டம்பரில் வெறும் 40 மணி நேரத்திற்குள் ஒரு கப்பலில் 5,612 கார்கள் ஏற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள NQXT துறைமுகத்தைக் கையகப்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது.. இரண்டாம் காலாண்டில் 9 புதிய கடல்சார் கப்பல்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தக் கப்பல்கள் எண்ணிக்கை 127ஆக உயரும்.
லாஜிஸ்டிக்ஸ் பிஸ்னஸ் 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,224 கோடி வருவாயுடன் 92% ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது. டிரக்கிங் சேவைகள், வெளிநாட்டு சரக்கு சேவை நெட்வொர்க், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.
கடல்சார் செயல்பாடுகள் 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹1,182 கோடியுடன் 213% ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளன. வெளிநாட்டு துறைமுகங்கள் 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,050 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளன. ஹைஃபா துறைமுகம் (இஸ்ரேல்), கொழும்பு வெஸ்ட் பன்னாட்டு முனையம் (இலங்கை) மற்றும் டார் எஸ் சலாம் (தான்சானியா) ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும்.
உள்நாட்டுத் துறைமுகங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ₹12,488 கோடி வருவாயுடன் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மேலும், 74.2% ஈபிஐடிடிஏ என்ற புதிய சாதனையை எட்டியுள்ளன.
2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹9,503 கோடி கேஷ் ப்ளோவை APSEZ பெற்றுள்ளது.. இது EBITDAல் 86% ஆகும்.
தாமரா துறைமுகம் புதிய ஏற்றுமதி தளத்தைத் தொடங்கப்பட்டுள்ளது.. காரைக்கால் துறைமுகத்தின் ஆழும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாகக் கப்பல் டூ கப்பல் எரிபொருள் நிரப்பும் சேவையைத் தொடங்கப்படும். இதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்கா நீர்நிலைகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. கடல்சார் செயல்பாடுகளுக்கான கட்டளை மையம் திறக்கப்பட்டது.. இது ரியல் டைம் கப்பல் கண்காணிப்பை எளிதாக்குகிறது.
ஏஐ திறன் கொண்ட கட்டளை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. முந்திரா மற்றும் கிருஷ்ணப்பட்டினத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
12 துறைமுகங்கள் "ஜீரோ வேஸ்ட் நிலப்பரப்பு" என சான்றளிக்கப்பட்டுள்ளன. 2040ஆம் ஆண்டுக்குள் நிகர ஜீரோ கார்பன் எமிஷன் இலக்கை அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. APSEZ இப்போது நிப்ஃடி ESG Index, நிப்ஃடி ESG Sector Leaders Index மற்றும் நிப்ஃடி Enhanced ESG Index ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.
முந்திரா துறைமுகம் இந்தியா மரிடைம் விருதுகளில் "சிறந்த தனியார் துறைமுக மற்றும் ஆண்டின் சிறந்த கொள்கலன் முனையம்" விருதை வென்றது. இந்தியா மரிடைம் வாரத்தில் "கடல்சார் சாதனையாளர்கள்" பிரிவில் "துறைமுக முன்னோடி" விருதை APSEZ வென்றது.
ஓஷன் ஸ்பார்க்கிள் நிறுவனத்திற்கு "மின்னிலக்க நௌகிக் டெக் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது" வழங்கப்பட்டது. தாமரா துறைமுகம் ஒடிசா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் "மாசு கட்டுப்பாட்டு பாராட்டு விருது" பெற்றது. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாட்டில் "சிறந்த துறைமுகச் சேவை வழங்கும் நிறுவனம்" மற்றும் "லாஜிஸ்டிக்ஸ் சாம்பியன்" விருதுகளை வென்றது.
கங்காவரம் துறைமுகத்திற்கு "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" விருது, விழிஞ்சம் துறைமுகத்திற்கு "மாசுக்கட்டுப்பாட்டு இயந்திர உபகரணங்கள்" விருது மற்றும் தாமரா துறைமுகத்திற்கு "கழிவு குறைப்பு" விருதுகள் வழங்கப்பட்டன.. கோவா துறைமுகத்திற்கு Apex India Green Leaf Awards அமைப்பு "டயமண்ட் விருது" பெற்றது.












Click it and Unblock the Notifications