டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிவினை அரசியல் நிறைய நடக்கிறது.. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறோம்.. ஏ.ஆர் ரஹ்மான்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரிவினை அரசியல் நிறைய நடந்து வருவதாகவும் எனினு மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாகவும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி: 50 வது சிம்பொனி' நிகழ்ச்சியில் ('Ekam Satt Unity Concert: The 50th Symphony') பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 AR Rahman on divisive politics : Theres divisive politics happening, but we are wired for unity

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இன்றைக்கு மக்கள் சரியான திசையில் செல்கிறார்கள். 'ஒற்றுமை' என்று நீங்கள் கூறும்போது, 'நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?' பிளவுபடுத்தும் அரசியல் நிறைய நடப்பதால், பிளவுபடுத்தும் மனநிலையே இங்கு இருக்கிறது.

ஆனாலும் இறுதியில் மனிதர்களாகிய நாம் ஒற்றுமைக்காக கடுமையாக உழைக்கிறோம், ஒற்றுமையில் அமைதியைக் காண்கிறோம், நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என்று நம்மிடம் பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்" என்றார்.

English summary
AR Rahman on divisive politics : "the term 'oneness' can make people question its existence in today's cynical world, which is rife with divisive politics and mentality"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X