டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் அந்த தேர்தலில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதன் முன்னோட்டமாக கூட்டணி பேரங்கள் நடந்து வருகின்றன.

பேச்சு

பேச்சு

கடந்த வெள்ளிக்கிழமை வரை காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கும் என பேச்சு இருந்து வந்தது.

விஷம் குடிக்க

விஷம் குடிக்க

இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில் ஒரு காலத்தில் மோடியையும் அமித்ஷாவையும் வெளியேற்ற காங்கிரஸுடன் கூட்டணி என்ற பெயரில் விஷம் குடிக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆலோசனை

ஆலோசனை

ஆனால் தற்போது ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் மேற்கண்ட 3 மாநிலங்களிலும் தனித்து போட்டியிடும். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. கொல்கத்தா பேரணியை போல் டெல்லியிலும் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிரான நிலைப்பாடு

எதிரான நிலைப்பாடு

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சி நம்பகத்தன்மை அற்றது என்று விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை சமீபத்தில் நடந்த பொது கூட்டங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜரிவால் வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
Aam Aadmi Party (AAP) ruled out the possibility of an alliance with Congress in upcoming Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X