தமிழக மீனவர்கள் அனாதைகளா? இலங்கை கடற்படையுடன் கை கோர்த்த இந்திய கடற்படை-வைகோ விளாசல்-கெஞ்சிய நிர்மலா
டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தினமும் கைது செய்து கொண்டிருக்கிறது; இந்திய அரசு இதுவரை என்னதான் செய்தது? இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் வரி கட்டுகின்றனர்; அந்த மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு என்னதான் செய்துள்ளது? தமிழ்நாட்டு மீனவர்கள் அனாதைகளா என்ன? என ராஜ்யசபாவில் கோபம் கொப்பளிக்க சிவந்த கண்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ராஜ்யசபாவில் இன்று வைகோ பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 43 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை அவர்களால் கட்ட இயலவில்லை. இதனால் அந்த மீனவர்களுக்கு மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் கைது
இதேபோல மன்னார் வளைகுடாவில் மீன்பிடித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கடந்த பிப்ரவரி 19-ந் தேதி மீண்டும் 42 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
என்ன செய்கிறது இந்திய கடற்படை?
இலங்கை கடற்படை எங்களது மீனவர்களின் கடல் தொழிலையே சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிற போது அங்கே இந்திய கடற்படை என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
என்னதான் நடவடிக்கை எடுத்தீர்கள்?
தமிழ்நாட்டு மீனவர்களும்தான் இந்திய அரசுக்கு வரி செலுத்துகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் என்ன அனாதைகளா? 40 ஆண்டுகளாக.. 843 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் இந்த மீனவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தது?

எதற்காக மோடி இலங்கை செல்கிறார்?
வெளியுறவுத் துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் இலங்கையின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். ஆனாலும் மீனவர்கள் கைது நடவடிக்கை ஓயவில்லை. இப்போது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல இருக்கிறார்? எதற்காக மோடி இலங்கைக்கு செல்கிறார்? தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க இலங்கைக்குப் போகிறாரா மோடி?
ஸ்டாலின் கடிதம் குப்பை கூடையிலா?
இன்றைக்கும் கூட ராமேஸ்வரம்- தங்கச்சி மடத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் அனுப்பியும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் இந்த கடிதங்கள் அனைத்தையும் குப்பை கூடையில் தூக்கி வீசிவிட்டனரே.. தமிழ்நாட்டு மக்களை டெல்லி அரசு- இந்திய அரசு ஏமாற்றுகிறது- வஞ்சிக்கிறது.
இந்திய கடற்படை பதிலடி தந்ததா?
ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லக் கூடாது; இலங்கை தலைவர்களை இந்தியாவுக்கு அழைக்க வேண்டும்; இத்தனை முறை தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கி இருக்கிற இலங்கை கடற்படைக்கு எதிராக ஒரே ஒரு முறையாவது இந்திய கடற்படை பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறதா? இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்திய அரசின் இந்த வஞ்சகத்தால் தமிழக மக்கள் அனைவரும் காயப்பட்டுள்ளனர். இவ்வாறு வைகோ பேசினார்.
Senior MP Shri Vaiko speaks with great emotion, and we understand his concern. However, the one line he expressed with anger should be reconsidered.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) March 19, 2025
I would like to remind this august House that in 2014, it was Hon'ble Prime Minister Shri @narendramodi who directly spoke to the… pic.twitter.com/EiwNuk0mLY
கெஞ்சிய நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் வைகோ மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார். அவரது கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், அவர் கோபத்துடன் வெளிப்படுத்திய ஒரு வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நமது இந்திய கடற்படையா? இலங்கை கடற்படையுடன் கூட்டு சேர்ந்துள்ளது? நமது இந்திய கடற்படையா மீனவர்களை சித்திரவதை செய்கிறது? ஆகையால்தான் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2014 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி- இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசி, இலங்கை நீதிமன்றம் மற்றும் அரசினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வந்தார் என்பதை இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எனவே, நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான எந்த முயற்சியையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை என்பதை இங்கே தெளிவாகக் கூற விரும்புகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications