நள்ளிரவில்.. போனை போட்டு பிரதமர் மோடி கேட்ட கேள்வி.. "செம சார்.." அமைச்சர் ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு நள்ளிரவில் பிரதமர் மோடி போன் செய்து அங்குள்ள சூழல்களை விசாரித்ததாகவும் அப்போது முதலில், 'நீங்கள் வீழித்து இருக்கிறீர்களா' என்று பேசியதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் மசர் இ ஷரிப் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது நள்ளிரவை தாண்டி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்றதும் அங்கு என்ன நடைபெற்றது என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து கொண்டிருந்தோம். எனது போனில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

அப்போது, நள்ளிரவில் திடீரென பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதல் கேள்வியாக விழித்து இருக்கிறீர்களா? எனக்கேட்டார். அதைத்தொடர்ந்து அங்குள்ள சூழல் குறித்தும் உதவிகள் செய்வது குறித்தும் நான் பிரதமரிடம் தெரிவித்தேன். மீட்பு மற்றும் உதவிகள் முடிந்த பிறகு மீண்டும் அழைக்குமாறு கூறினார். இதற்கு நான், அனைத்து பணிகளும் முடிவடைய 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்று கூறினேன்.
மேலும் பிரதமர் அலுவலகத்தில் கூறிவிடுவதாகவும் தெரிவித்தேன். ஆனால், பிரதமர் மோடி, எனக்கு போன் செய்யுங்கள்'' என்றார். தேவைப்படும் நேரத்தில் பிரதமர் மோடி பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாகவும் பாராட்டிய ஜெய்சங்கர், கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் இந்தியா எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க முடிந்தது என்பது குறித்தும் பேசினார்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்ற போது நடைபெற்ற மீட்பு பணிகள் குறித்தும் ஜெய்சங்கர் பேசினார். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications