இலவசத்தை அறிவிச்சு தான் ஆட்சியையே பிடிக்குறாங்க! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாத விவாதம்! பின்னணி!
டெல்லி : சில அரசியல் கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியைப் பிடிக்க முற்படுவதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட நிலையில் இலவச விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டி இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
இலவசத் திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு வாத விவாதங்கள் மத்திய அரசு சார்பிலும் சில மாநில கட்சிகள் சார்பிலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்த நிலையில் அதில் மத்திய அரசு மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாகவும் ஆனால் இலவச திட்டங்களை மாநில அரசில்தான் செயல்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.

இலவசம் தொடர்பான வழக்கு
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வில் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, திமுகவின் கோரிக்கையை ஏற்று, வழக்கில் அக்கட்சியை எதிர்மனுதரராக இணைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை என நிதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி வி.என்.ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் செலிசிஸ்டர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிட்டு வருகிறார். இதேபோல் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில்,சிங்வி உள்ளிட்டோரும் வாதடினர். வழக்கம் போலவே இன்றைய விசாரணையின் போதும் வாதங்களால் நீதிமன்றத்தில் அனல் பறந்தது.

காரசார விவாதம்
அப்போது தேர்தலின் போது வழங்கப்படும் இலவசம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக தனியாக ஒரு ஆணையம் அல்லது குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கூறினார்கள். அப்போது மத்திய அரசு சார்பில் இதுவும் ஒரு நல்ல யோசனை எனவும் ஆனால் நீதிமன்றம் அமைக்கும் குழுவுக்கு தலைமை அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டது.

ஆபத்தானது
அப்போது பேசிய தலைமை நீதிபதி ரமணா, தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு இது தொடர்பான விஷயத்தில் அனைவருமே தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசம் தொடர்பாக விவாதிக்கிறோம் தவிர, தேர்தலுக்குப் பிந்தைய இலவச திட்டங்கள் குறித்து பேசுவதில்லை என கூறினார். இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞரான சிங்வி, 'தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் குறித்து நீதிமன்றம் தலையிடுவதால் எந்த குழப்பமும் வராது ஆனால் தேர்தலுக்குப் பிறகான திட்டங்களில் தலையிடுவது ஆபத்தானது' என்றார்.

குழு அல்லது ஆணையம்
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் தேர்தல் இலவச அறிவிப்புகள் குறித்த விவகாரத்தில் ஆய்வு செய்ய குழு அல்லது ஆணையம் அமைப்பதாக இருந்தாலும் அந்த அரசியல் கட்சியினர் எதிர்ப்பதால் இது குறித்து விரிவான ஒரு விவாதம் தேவை என கூறினார். இறுதியாக இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் செலி சிஸ்டர் ஜெனரல் விஷார் மேத்தா இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் கடுமையான விளைவுகளை உருவாக்குகிறது குறிப்பாக விலையில்லா மின்சாரம் என்ற அறிவிப்பு காரணமாக மின்வாரியங்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் இலவசங்களை வைத்து சில அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார்கள் எனவே இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்ய தயாராக உள்ளது என கூறினார்.

3 நீதிபதிகள் அமர்வு
இப்படி மாறி மாறி அனல் பறக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இலவசங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பதால் இலவச விவகாரங்கள் குறித்த வழக்கை நீதிபதி சந்திர சூட் தலைமையில் 3 நீதிபதில் கொண்ட அமர்வுக்கு மாற்றி பட்டியலிட வேண்டும் என உத்தரவிடப்படுவதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications