‛மோடி என கோஷமிடும் கணவருக்கு உணவு கொடுக்காதீங்க’.. பெண்களிடம் கூறிய கெஜ்ரிவால்! கிளம்பிய விவாதம்
டெல்லி: ‛‛இப்போது பெரும்பலாான ஆண்கள் மோடி என கோஷமிடுகின்றனர். இப்படி கோஷமிடும் கணவருக்கு இரவு உணவு வழங்காதீர்கள்'' என ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கிடையே தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார்.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை அமலாக்கத்துறை மூலம் நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பாஜகவை விளாசி வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி டவுன்ஹாலில் மகளிருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆம்ஆத்மி சார்பில் நடந்தது.
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது தான் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: இப்போது அதிகமான ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்து கோஷமிட்டு வருகின்றன. இவர்களை நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டும். உங்களின் கணவர் மோடி பெயர் சொல்லி கோஷமிட்டால் இரவு உணவு கிடையாது என அவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.
மேலும் நீங்கள் (பெண்கள்) அனைவரும் பிற பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கூற வேண்டும். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்களிடம் அந்த கட்சி எப்போதும் உதவிக்கு வராது. பிரச்சனை என்றால் சகோதரர் கெஜ்ரிவால் தான் ஆதரவாக வந்து நிற்பார் என தெரிவிக்க வேண்டும். மேலும் கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
இலவச மின்சாரம், இலவச பஸ் பயணம், மேலும் மாதம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி எடுத்து கூற வேண்டும். அதேபோல் பாஜக இதை எல்லாம் செய்தார்களா? என சுட்டிக்காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி இத்தகைய திட்டங்களை செயல்படுத்தாத பாஜகவுக்கு நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்? என கேள்வி கேட்டு கெஜ்ரிவாலுக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும்'' என கூறினார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications