புதிய அமைச்சரவை.. முக்கிய இலாக்காக்களை விட்டுக்கொடுக்காத பாஜக! கூட்டணிக்குள் குழப்பமா?
டெல்லி: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நரேந்திர மோடி இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார். அதேபோல புதிய அமைச்சரவையும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் முக்கிய துறைகள் பாஜக வசம் மட்டுமே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். பிரதமர் பதவிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் தூண்களாக இருப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளின் எம்பிக்களை கழித்துவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு வெறும் 260 எம்பிக்கள்தான் மிஞ்சுவார்கள். ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை.
எனவே பாஜக இருவரையும் தாங்கு, தாங்கு என்று தாங்குகிறது. என்ன கேட்டாலும் செய்ய தயார் என ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பாஜக முன்வந்திருக்கிறது. எனவே இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன. அதாவது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அதேபோல முக்கிய துறைகளை தங்களிடமே வைத்துக்கொள்ள பாஜக முடிவெடுத்திருக்கிறது. அதாவது உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத்துறைகளை பாஜகவே வைத்துக்கொள்ள பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, உள்துறை அமைச்சராக அமித்ஷா, வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்காரி ஆகியோர் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை குறி வைத்திருக்கிறது. அதேபோல மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி டார்கெட் செய்திருக்கிறது. எனவே அமைச்சரவையில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மறுபுறம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தேஜஸ்வி யாதவ் ஒன்றாக பயணித்த சம்பவம் பேசு பொருளாகி இருந்தது. அதேபோல கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இப்படியாக இந்தியா கூட்டணி தனது நகர்வை தொடங்கியிருக்கிறது. ஒருவேளை சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கேட்கும் பதவிகளை பாஜக தர மறுத்தால் காங்கிரஸ் அதை வழங்க முன்வரும் என்று கூறப்பட்டு வருகிறது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications