மத்திய பாஜக அரசு, பதஞ்சலி, கோத்ரேஜ்- மெகா பாமாயில் சாகுபடி- தமிழகத்தில் ஊடுருவல்- அஸ்ஸாம் எதிர்ப்பு!
டெல்லி: மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் பதஞ்சலி, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக 11 மாநிலங்களில் பாமாயில் சாகுபடி திட்டம் முழு வீச்சில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை வடகிழக்கு மாநிலங்களில் படுதீவிரமாக செயல்படுத்த ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பாமாயில் பெறக் கூடிய எண்ணெய் பனை சாகுபடி தடி செய்யபப்ட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இப்போது எண்ணெய் பனை சாகுபடியை மத்திய அரசு முழுவீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறது. பாமாயில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கோத்ரேஜ், பதஞ்சலி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே மத்திய அரசு எண்ணெய் பனை சாகுபடி திட்டத்தை மும்முரமாக செயல்படுத்துகிறது என்பது குற்றச்சாட்டு.

மணிப்பூர் மாநிலத்தில் மலைப்பகுதிகளில் குக்கி பழங்குடிகளை துரத்தி அடிப்பதும் கூட எண்ணெய் பனை சாகுபடி திட்டத்தின் ஒரு பகுதிதான் எனவும் விமர்சனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமையல் எண்ணெய் பனைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், மாநில அரசுகள் எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து எண்ணெய் பனை சாகுபடியை மேலும் ஊக்குவிக்கவும் அதிகரிக்கவும் ஜூலை 25 அன்று தொடங்கிய 'மெகா எண்ணெய் பனை நடவு இயக்கத்தை' தொடங்கின. இது நாட்டையும் அதன் விவசாயிகளையும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை உண்டாக்குகிறது. இதன் மூலம் 2025-26 க்குள் எண்ணெய் பனை உற்பத்தியின் கீழ், கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர் பரப்பு என்ற இலக்கை அடைய முடியும் என்கிறது மத்திய அரசு.
மேலும் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, கர்நாடகா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகியவை எண்ணெய் பனை வளர்க்கும் முக்கிய மாநிலங்களாகும். பதஞ்சலி புட் பிரைவேட் லிமிடெட், கோத்ரேஜ் அக்ரோவெட் மற்றும் 3 எஃப் போன்ற எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றன. இதுதவிர, கே.இ., விவசாயம், நவபாரத் போன்ற பிற பிராந்திய நிறுவனங்களும் பங்கேற்றன. மெகா எண்ணெய் பனை மரம் நடும் திட்டம் 2023 ஆகஸ்ட் 12அன்று நிறைவடைந்தது. இந்த இயக்கத்தின் மூலம், மாநிலங்கள் மற்றும் நிறுவனங்கள் 11 மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களில் சுமார் 3500 ஹெக்டேர் பரப்பளவில் 7000 க்கும் மேற்பட்ட விவசாயிகளை அடைய முடிந்தது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் மெகா நடவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் துறை ஊழியர்களுடன் இணைந்து விவசாயிகளுக்கான எண்ணெய் பனை சாகுபடி குறித்த தனித்துவமான மற்றும் தீவிரமான பெரிய அளவிலான தொழில்நுட்பப் பயிற்சி கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்தன. ஆலைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், அதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், நிலையான வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும் உதவும் மேலாண்மை தொகுப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் ஊழியர்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கருத்தரங்குகளின் நோக்கமாகும். நாடு தழுவிய மெகா எண்ணெய் பனை நடவு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தொடர் நிகழ்வுகளில் மூத்த அரசியல் தலைவர்கள், துறை அதிகாரிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உட்பட பல பி ரமுகர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தரமான நடவு பொருட்கள், பயிரை பராமரிக்க நிதி உதவி, ஊடுபயிராக சாகுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையுடன் உறுதியான சந்தையும் வழங்கப்படுகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்ட எண்ணெய் பனை சாகுபடியை வடகிழக்கு மாநில மக்கள் மீது திணித்து பாலைவனமாக்க சதி செய்கிறது மத்திய அரசு எனவும் குற்றம்சாட்டி உள்ளது ஆம் ஆத்மி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications