டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.. ஏபிபி எக்சிட் போல்

Google Oneindia Tamil News

டெல்லி : ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அசாமில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறைந்த வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam exit poll: BJP likely to win 58-71 predicts ABP - C voter exit poll

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் பாஜக கூட்டணி 58 முதல் 71 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 53 முதல் 61 இடங்களையும் கைப்பற்றும். இதர கட்சிகள் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாஜக கூட்டணி அசாமில் 6 இடங்கள் குறைவாகவும், காங்கிரஸ் 20 இடங்கள் வரை அதிகமும் பெற வாய்ப்புள்ளது.

பாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P= MARQ எக்ஸிட் போல்!பாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P= MARQ எக்ஸிட் போல்!

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணி 42.9 சதவீதம், காங்கிரஸ் கூட்டணி 48.8 சதவீதம், இதர கட்சிகள் 8.3 சதவீதம் ஓட்டுக்களை பெற வாய்ப்புள்ளது. கடந்த முறையை விட இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதர கட்சிகளுக்கு குறைந்த வாக்கு சதவிகிதம் தான் இங்கு வெற்றியாளரை தீர்மானிக்க உள்ளது.

English summary
Assam exit poll: BJP likely to win 58-71 predicts ABP - C voter exit poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X