அஸ்ஸாமில் கர்பி அங்லாங் தனி மாநிலம் கோரிய இயக்கங்களுடன் அமைதி ஒப்பந்தம்- 1000 பேர் விரைவில் சரண்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அஸ்ஸாமில் இருந்து கர்பி அங்லாங் பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பதற்காக ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் கர்பி இயக்கங்களின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கு தனி நாடு, தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடகிழக்கில் தீவிரவாதத்தை முறியடித்து அமைதியை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆயுதம் ஏந்திய அமைப்புகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. இருந்த போதும் இன்னமும் ஆயுதம் ஏந்திய குழுக்களின் போராட்டம் தொடருகிறது.

 கடந்த ஆண்டு போடோ ஒப்பந்தம்

கடந்த ஆண்டு போடோ ஒப்பந்தம்

கடந்த ஆண்டு அஸ்ஸாமில் போடோ இனமக்கள் 27 ஆண்டுகள் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்த ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அஸ்ஸாமின் கோக்ரஜாரில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.

 போடோ பாதையில்...

போடோ பாதையில்...

அப்போது பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு அல்லது மாவோயிஸ்ட் பகுதிகள் அல்லது, ஜம்மு காஷ்மீரில் இன்னமும் ஆயுதங்கள் மற்றும் வன்முறை மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் போடோ இளைஞர்களிடமிருந்து பாடம் கற்று, உத்வேகம் பெற்று, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸாம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிக்கு 21-ஆம் நூற்றாண்டின் புதிய தொடக்கத்தை, புதிய விடியலை, புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ள இந்த நாள் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

 டெல்லியில் கையெழுத்து

டெல்லியில் கையெழுத்து


தற்போது அஸ்ஸாமில் கர்பி அங்லாங் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய 6 இயக்கங்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் கர்பி தனிமாநிலம் கோரிய இயக்கங்களின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 கர்பி அங்லாங் பிரச்சனை என்ன?

கர்பி அங்லாங் பிரச்சனை என்ன?

அஸ்ஸாம் மாநிலத்தில் கர்பி அங்லாங் பகுதியில் கர்பி பழங்குடி இனத்தவர் கணிசமாக வசிக்கின்றனர். போடோ, குக்கி, ரெங்மா நாகாக்கள் என வேறு பழங்குடி இனமக்களும் இப்பகுதியில் வாழ்கின்றனர். நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாக 1946-ல் கர்பி இன மக்களுக்கான Karbi A Dorbar என்ற அமைப்பு உருவாக்கபட்டது. இதுதான் கர்பி மக்களின் முதலாவது அமைப்பு. 1947-ம் ஆண்டு மே 18-ல் ஆங்கிலேய அரசின் பர்தோலி கமிட்டியிடம் தங்கள இனமக்கள் வசிக்கும் பகுதியை தனி மாவட்டமாக்க வேண்டும் என இந்த அமைப்பு கோரியது. 1951-ம் ஆண்டு ஐக்கிய மிகிர் மற்றும் வடக்கு சச்சார் மலை பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1952-ல் இந்த மாவட்டத்துக்கு தன்னாட்சி பெற்ற கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1970ல் இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக கர்பி அங்லாங் இருந்து வருகிறது. இதனை தனி மாநிலமாக அறிவிக்க கோரிதான் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. 1995-ம் ஆண்டு மத்திய அரசுடனான ஒப்பந்தத்தின் மூலமாக கர்பி அங்லாங் மாவட்ட கவுன்சிலானது கர்பி அங்லாங் சுயாட்சி கவுன்சிலாக மாற்றப்பட்டது. 2011-ல் மத்திய அரசுடன் United People's Democratic Solidarity(UPDS) என்ற கர்பி அங்லாங் அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அமைதி ஒப்பந்தம்


இதன்விளைவாக கடந்த பிப்ரவரி மாதம் 200 கர்பி அங்லாங் போராளிகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இதன் அடுத்த கட்டமாக தற்போது 6 கர்பி அங்லாங் இயக்கங்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, ஒப்பந்தத்தின் படி 1,000 போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவார்கள். அஸ்ஸாமில் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சாதனை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+