டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரமான சம்பவம்..! பால்கோட் ஹீரோ அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு .. இந்தியா விமானப்படை உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: பால்கோட் ஹீரோவான ஹீரோவான அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. விங் கமாண்டராக இருந்த அபிநந்தனுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவத்தின் அதிநவீன எப்-16 ரக விமானம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது.

அப்போது, சரியான நேரத்தில் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விரட்டியடித்தனர்.

ரபேல் விமானத்தில் அபிநந்தன் பறந்திருந்தால்.. விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.. முன்னாள் தலைவர்ரபேல் விமானத்தில் அபிநந்தன் பறந்திருந்தால்.. விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.. முன்னாள் தலைவர்

அபிநந்தன்

அபிநந்தன்

அந்த சமயத்தில் இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு பாக். விமானங்களை விரட்டி அடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட் மூலம் அவர் குதித்துத் தப்பினார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.

சில நாட்கள்

சில நாட்கள்

அங்கு அதிக வெளிச்சம் உள்ள அடையில் அடைத்து வைத்து அவருக்கு சித்தரவதைக் கொடுக்கப்பட்டதாக எல்லாம் தகவல் வெளியானது. இருப்பினும், சர்வதேச அளவில் இந்த சம்பவம் கவனம் பெற்றது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கவே சில நாட்களில் அபிநந்தனை பாக். ராணுவம் விடுதலை செய்தது. அதன் பிறகு காயங்களுக்கு மருத்து சிகிச்சை பெற்ற அவர், சில நாட்கள் ஓய்வெடுத்தார்.

மீண்டும் ராணுவத்தில்

மீண்டும் ராணுவத்தில்

இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களுக்குள் அவர் மீண்டும் ராணுவத்தில் தனது பணிக்குத் திரும்பினார். அப்போது அவரை வரவேற்ற வீரர்கள் அபிநந்தன் உடன் உற்சாகமாக செல்பி எடுத்தனர். இந்நிலையில் பாலகோட் ஹீரோவான அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு

பதவி உயர்வு

பழமையான தொழில்நுட்பத்தில் இயங்கும் மிக் 21 விமானத்தைக் கொண்டு அதிநவீன F-16 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையும் அபிநந்தனுக்கு உண்டு. விங் கமாண்டராக இருந்த அபிநந்தனுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அவருக்கு வீர் சக்ரா விருதும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Air Force has promoted war hero Wing Commander Abhinandan to the rank of Group Captain. Abhinandan latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X