நீர்நிலை ஆக்கிரமிப்பில் 2வது இடம்.. பெங்களூர் வெள்ளத்தால் தமிழகத்துக்கு எச்சரிக்கை மணி.. முழுவிபரம்
டெல்லி: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் மொத்தம் 37 ஆயிரம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கர்நாடகம் 5வது இடத்திலும் தமிழ்நாடு 2வது இடத்திலும் உள்ளது. இதனால் பெங்களூர் வெள்ளம் என்பது தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரகிறது. முந்தைய ஆண்டுகளை விட அதிகளவில் மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன.
இந்த மழையின் காரணமாக பல மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரும் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் கனமழை
பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் 30ம்தேதி இரவில் பெங்களூரில் கனமழை பெய்தபோது ஓஆர்ஆர் எனும் பெங்களூர் புறநகர் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த பாதிப்பை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் விடியவிடிய நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. சர்ஜாபுரா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, பெல்லந்தூர் உள்பட நகரின் முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அன்று மட்டும் 130 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

ரூ.250 கோடி இழப்பு
இதனால் தற்போது பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. மொத்தம் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், மழை நீர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஐடி நிறுவனங்கள் கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளன. தற்போது வரை பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை. இதனால் பெங்களூர் மழை வெள்ளப்பாதிப்பு என்பது இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது.

ஆக்கிரமிப்பால் வெள்ள பாதிப்பு
இந்நிலையில் தான் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதே மழை வெள்ளத்துக்கு முக்கிய காரணம் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும் பெங்களூரில் பல ஆண்டுகளாக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே மழை வெள்ளத்துக்கு முக்கிய காரணம் என பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளன. இன்னும் மழை நீர் வடியாததால் ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பெங்களூரின் இத்தகைய பாதிப்புக்கு நகரமயமாக்கல் தான் காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகத்தில் 948 நீர்நிலை ஆக்கிரமிப்பு
அந்த வகையில் தான் இந்தியாவில் சுமார் 37,000 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அமைச்சகத்தின் விபரங்கள்படி கர்நாடகத்தில் மொத்தம் 948 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 15,301 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு 2வது இடம்
இதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து தென்மாநிலங்கள் உள்ளன. 8,366 நீர்நிலை ஆக்கிரமிப்புடன் தமிழ்நாடு 2வது இடத்திலும், 3,920 நீர்நிலை ஆக்கிரமிப்புடன் ஆந்திரா 3வது இடத்திலும், 3,032 நீர்நிலை ஆக்கிரமிப்புடன் தெலுங்கானா 4வது இடத்திலும், 948 நீர்நிலை ஆக்கிரமிப்புடன் கர்நாடகா 5வது இடத்திலும் உள்ளன. நீர்நிலை ஆக்கிரமிப்பில் 4வது இடத்தில் உள்ள கர்நாடகத்தில் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்ததால் பெங்களூரில் வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 மாநிலங்கள் பாதிக்க வாய்ப்பு
கர்நாடகத்தை ஒப்பிடும்போது தென்இந்திய மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை நீர்நிலை ஆக்கிரமிப்பில் முன்னிலையில் உள்ளன. இதனால் வரும் நாட்களில் இந்த மாநிலங்களில் கனமழை பெய்தால் முக்கிய நகரங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் வெள்ளம் பாதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இந்த 3 மாநில அரசுகளும் பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை முறையாக செய்ய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

சதவீத அடிப்படையிலும் தமிழ்நாடு டாப்
மேலும் இந்தியாவில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் சதவீத அடிப்படையில் பார்த்தால் 10 சதவீதத்துடன் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 7.82 சதவீத ஆக்கிரமிப்புடன் தமிழ்நாடு 2வது இடத்திலும், 6.24 சதவீதத்துடன் உத்தர பிரதேசம் 3வது இடத்திலும், 4.73 சதவீதத்துடன் தெலுங்கானா 4வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications