டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த தேர்தல் ரிசல்ட் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை..மோடிக்கு நன்கு இது தெரியும்..பிரசாந்த் கிஷோர் பளிச்!

Google Oneindia Tamil News

டெல்லி: ‛‛உண்மையான போர் 2024ல் தான். இது பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரியும்'' என 5 மாநில தேர்தல் முடிவு வெளியான நிலையில் அரசியல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம், கோவா பஞ்சாப், மணிப்பூர், தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் உத்தர பிரதேசத்தில் 403ல் 255 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் கரை சேர்ந்துள்ளனர்.

மணிப்பூரில் 60 இடங்களில் பாஜக 32 இடங்களில் வாகை சூடியுள்ளது. இங்கு காங்கிரஸ் கூட்டி 5 தொகுதியில் மட்டும் வென்றுள்ளது. உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களில் பாஜகவும், 19 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

கோவாவில் உள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் வென்றுள்ளது. மற்றவர்களின் ஆதரவுடன் இங்கும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில் 92 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

4ல் பாஜக வெற்றி

4ல் பாஜக வெற்றி

இந்த 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்திருப்பது அக்கட்சியை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

 2024 பாராளுமன்ற தேர்தல்

2024 பாராளுமன்ற தேர்தல்

அதாவது 2024ல் பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகள் கைக்கொடுக்கும் என அவர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக எம்பிக்கள் கிடைத்தால் அது மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு எளிமையாக இருக்கும். இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் உத்தர பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் பாஜகவுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதை தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது பேச்சில் வெளிப்படுத்தி இருந்தார். அதாவது 2024ல் பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற உத்தரபிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகள் கைக்கொடுக்கும் என அவர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக எம்பிக்கள் கிடைத்தால் அது மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு எளிமையாக இருக்கும். இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் உத்தர பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் பாஜகவுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதை தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது பேச்சில் வெளிப்படுத்தி இருந்தார்.

2024ல் தான் இந்தியாவுக்கான போர்

2024ல் தான் இந்தியாவுக்கான போர்

இந்நிலையில் தான் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‛‛இந்தியாவுக்கான போர் 2024ல் நடத்தப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப்படுமே தவிர, பிற மாநில தேர்தல்கள் முடிவு செய்யாது. இது சாகேபுக்கும் தெரியும். அதனால்தான் மாநில தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் உளவியல் பாதிப்பை ஏற்படுத்த புத்திசாலித்தனமாக முயற்சி மேற்கொள்கிறார். இந்த தவறான சித்தரிப்புக்கு பலியாகவோ, அல்லது பாதிப்படையவோ வேண்டாம்'' என கூறியுள்ளார்.

Recommended Video

    UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத்
    மறைமுகமாக மோடி..

    மறைமுகமாக மோடி..

    பிரசாந்த கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் ‛சாகேப்' என பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும். நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவு தற்போதைய உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளிலேயே தென்படுகிறது '' என கூறினார். இதை விமர்சிக்கும் வகையிலேயே பிரசாந்த் கிஷோர் இந்த பதிவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    ‛‛Battle for India is in 2024 , Prime Minister Narendra Modi also knows this’’ says Prasanth Kishore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X