நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரஹானே கேப்டனாக நியமனம்.. இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்த பி.சி.சி.ஐ
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் இந்தியா படுதோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இன்னும் சில தினங்களில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.
3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், நியூசிலாந்தும் களம் காண்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

விராட் கோலிக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பழைய வீரர்களை ஓரம்கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
மேலும் டி20 அணியில் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கலக்கிய வெங்கடேஷ் அய்யருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லிக்காக அசத்திய ஆவேஷ்கான், பெங்களூருக்காக விக்கெட் வேட்டை நடத்திய ஹர்சல் படேல் ஆகிய புதுமுகங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. இதேபோல் டெஸ்ட் அணியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

ரஹானே கேப்டன்
அதே வேளையில் தனக்கு டெஸ்ட் கேப்டன் வேண்டாம் என்று ரோகித் சர்மா கூறியதாக தகவல் வெளியானது. இதனால் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. துணை கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்திய அணி
முதல் டெஸ்ட்டில் ஓய்வு எடுக்கும் கோலி 2-வது டெஸ்ட்டில் அணிக்கு திரும்பி விடுவார். அவர் வழக்கம்போல் 2-வது டெஸ்டில் கேப்டனாக செயல்படுவார். ஐ.பி.எல்.லில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கே.எஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் புதுமுகமாக டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஷ் அய்யருக்கும் இடம் கிடைத்துள்ளது. முதல் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பின்வருமாறு:-
Recommended Video

இதுதான் அணி
ரஹானே(கேப்டன்) புஜாரா(துணை கேப்டன்) கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஷ் அய்யர், சஹா(விக்கெட் கீப்பர்) கே.எஸ் பரத்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications