'எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள்'.. பாஜக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை திடீர் கடிதம்!
டெல்லி: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமையகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 23-ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு வழியாக ஒரு கோவில் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இந்த கார் விபத்தில் உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். காரில் இரு சிலிண்டர்கள் இருந்தது தெரியவந்தது.

பாதுகாப்பாக இருங்கள்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐ ஏ)க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பாஜகவின் கட்சி தலைமையகம் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு திடீர் கடிதம் அனுப்பியுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் , அனைவரும் பாதுகாப்பாக, எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்..
அந்த கடிதத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நெல்லை, தென்காசி, திருப்பத்தூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரில் கருத்து பதிவிடும்போதும்...
இதேபோல் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களை அனுமதிக்காமல் யார் என்ற விவரங்களை அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும். இதேபோல நீங்கள் வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனமுடம் செல்ல வேண்டும். மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடும் போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் பதிவுகளை இட வேண்டும்.

தனியாக செல்லாதீர்கள்
இதேபோல் யாரும் தனியாக நடைப்பயிற்சி செல்லாதீர்கள்.. முடிந்தவரை எங்கும் தனியாக செல்வதை தவிர்த்து விடுங்கள். இதேபோல் தபால், கொரியர்களில் வரும் பார்சல்களை அப்படியே வாங்கிக்கொள்ளாமல் யார் அனுப்பினார்கள்.. எங்கிருந்து அனுப்பினார்கள் என்பது போன்ற விவரங்களை முழுவதும் அறிந்துவிட்டு அதன்பிறகு அவற்றை வாங்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக கட்சி தலைமையகத்தில் இருந்து இந்த கடிதம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்












Click it and Unblock the Notifications