இன்று பாரத் பந்த் போராட்டம்.. என்னவெல்லாம் நடக்கும், இந்த போராட்டத்தின் பின்னணி என்ன.. விவரம்
டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரத் பந்த் போராட்டத்தில் எவை எல்லாம் மூடப்பட்டிருக்கும். என்னவெல்லாம் நடக்கும், இந்த போராட்டம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இடஒதுக்கீடு பச்சாவோ சங்கர்ஷ் சமிதி (Reservation Bachao Sangharsh Samiti) என்ற அமைப்பு ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று, பாரத் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினர் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில டிஜிபி யுஆர் சாஹூ தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு இதுபற்றி அளித்த பேட்டியில், பாரத் பந்த் போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியை அதிகரிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பாரத் பந்த் தொடர்பாக சட்டம்-ஒழுங்கு நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு றிவுறுத்தல்கள் வழங்கி உள்ளோம். பந்திற்கு அழைப்பு விடுக்கும் குழுக்களுடனும், சங்கங்களுடனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறந்த ஒத்துழைப்பை வழங்க வலியுறுத்துவதற்காக அவர்களுடன் போலீசார் சந்திப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.

பாரத் பந்த் போராட்டம் ஏன்?: உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் மூலம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடுவிவகாரத்தில் உள்ஒதுக்கீடுகளை உருவாக்க மாநில அரசுகளை அனுமதித்துள்ளது. அதுமட்டுமின்றி. எஸ்சி எஸ்டியிலும் கிரிமிலேயர் முறை கொண்டுவர வேண்டும் என்றும் இடஒதுக்கீடு உண்மையில் தேவைப்படுவோருக்கே கிடைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் பாரத் பந்த் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உளளத. இந்த பாரத் பந்த் போராட்டத்திற்கு பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் பந்த் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள்: பாரத் பந்த் போராட்டத்தில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால், பல்வேறு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேவையான முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். அனைத்து பிரிவு ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு உத்தரபிரதேசத்தில் இநத விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது, இதன் காரணமாக அங்கு போலீசார் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் அலுவலகங்கள் பொதுவாக இதுபோன்ற பந்த நாட்களில் செயல்படாது என்றாலும், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், பால், மருந்து, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் செயல்படும் என்று தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications