டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே மிகப்பெரிய ட்ரையல்.. 3ம் கட்ட சோதனையில் கோவேக்சின்.. பாரத் பயோடெக் அசர வைக்கும் பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து உருவாக்கி இருக்கும் கோவேக்சின் மருந்து மூன்றாம் கட்ட மனித சோதனை செய்யப்பட உள்ளது.

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு.. இதற்கான இரண்டு கட்ட சோதனைகள் முடிந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

முதல் இரண்டு கட்ட சோதனையில் பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த காரணத்தால் தற்போது மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட உள்ளது.

அமெரிக்கா பெரிதும் நம்பிய மாடர்னா கொரோனா வேக்சின்.. 94.5% தடுப்பாற்றால் கொண்டது.. ரிசல்ட் வெளியானதுஅமெரிக்கா பெரிதும் நம்பிய மாடர்னா கொரோனா வேக்சின்.. 94.5% தடுப்பாற்றால் கொண்டது.. ரிசல்ட் வெளியானது

மூன்றாம் கட்டம்

மூன்றாம் கட்டம்

அதன்படி மூன்றாம் கட்ட சோதனைஇந்தியாவிலேயே மிக அதிகமாக மொத்தமாக 22 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த கோவேக்சின் சோதனை மொத்தமாக 26 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட உள்ளது. இதுதான் இந்தியாவில் கொரோனாவிற்காக நடத்தப்பட உள்ள மிகப்பெரிய வேக்சின் சோதனை ஆகும்.

எப்படி

எப்படி

இந்த சோதனையில் 26 பேரில் சிலருக்கு உண்மையான கோவேக்சின் அளிக்கப்படும், சிலருக்கு வெறும் சத்து புரத ஊசி போடப்படும். இதில் வெறும் ஊசி யாருக்கு போடப்படுகிறது என்று ஒரு சிலரை தவிர மற்ற பாரத் பயோடெக் நிர்வாகிகளுக்கே தெரியாது. இந்த 26 பேரை 28 நாட்களுக்கு பின் சோதனை செய்வார்கள். இதில், உண்மையான மருந்து பெற்றவர்கள் மற்றும் பொய்யான சத்து ஊசி பெற்றவர்களின் ஆரோக்கியம் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

கொரோனா

கொரோனா

இதில் யாருக்கு எல்லாம் கொரோனா வந்ததுள்ளது என்று ஒப்பிட்டு பார்க்கப்படும். இதன் மூலம் கோவேக்சின் எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்கப்படும். கோவாக்சின் மருந்தின் மனித சோதனை முக்கியமான நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை, பாட்னா, ஹைதராபாத், ஹரியானா , டெல்லியில் நடக்கிறது. வரும் நாட்களில் நாக்பூர், புவனேஷ்வர், கோரக்பூர், கான்பூர், கோவா, விஷக்கப்பட்டத்தில் மனித சோதனை நடக்க உள்ளது.

முதல் இரண்டு சோதனை

முதல் இரண்டு சோதனை

முதல் இரண்டு கட்ட சோதனையில் மருந்து பெற்றுக்கொண்ட நபர்களுக்கு லேசான பின்விளைவுகள் உடலில் ஏற்பட்டது.உடலில் மருந்து செலுத்தப்பட்ட தோல் பகுதி மட்டும் சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. சிலருக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. அதேபோல் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பின்விளைவுகள் ஏற்படவில்லை.

English summary
Bharat Biotech's Covaxin enters into third stage trail in India, It will test 26 thousand people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X