இதையெல்லாம் நிறுத்துங்க.. கல்லூரி கேண்டீன்களில் விற்கக் கூடாது.. திடீர்னு வந்த உத்தரவு.. என்னாச்சு?
டெல்லி: கல்லூரி கேண்டீன்களில் சில உணவு பொருட்களை விற்க கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
ஒரு சீரான உணவு தானியங்கள் மற்றும் தினைகளிலிருந்து 45 சதவீதத்திற்கு மிகாமல் கலோரிகளையும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியிலிருந்து 15 சதவீத கலோரிகளையும் வழங்க வேண்டும். மீதமுள்ள கலோரிகள் கொட்டைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பாலில் இருந்து வர வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
நமக்கு ஏற்படும் நோயை தடுக்க சரியான உடல் எடையை பராமரிக்க ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் அறிவித்துள்ளது... இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் (Dietary Guidelines for Indians) என்ற பெயரில் சில அறிவுறுத்தல்களையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டிருந்தது.

உப்பு, சர்க்கரை: அதாவது, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோயை தடுக்க, இந்தியர்கள் என்ன உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம் என்பது பற்றி விலாவரியாக எடுத்துரைத்திருந்தது.. அதில், உப்பு, சர்க்கரை மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை குறைவாக உட்கொள்ள வேண்டும் என்றும், உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, சர்க்கரையிலிருந்து உடலுக்கு வழங்கப்படும் கலோரிகள் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.. தானியங்கள் மற்றும் தினைகளிலிருந்து 45 சதவிகிதம் கலோரிகளும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியிலிருந்து 15 சதவிகிதம் கலோரிகளும் போதுமானது.. மீதமுள்ள கலோரிகள் உலர்ந்த பழங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்: நம்முடைய நாட்டில் இன்சுலின் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 56.4 சதவீதம் பேர் உள்ள நிலையில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களே இப்படியான உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம் என்றும் கூறியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் 4-ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதையடுத்து, பல்கலை, கல்லூரிகளில் செயல்படும் கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவு விற்பனைக்கு தடை விதித்து யுஜிசி அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அதிரடியாக அனுப்பியிருக்கிறது.
திடீர் உத்தரவு: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.. பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்..
அதில் உள்ளதாவது: "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் கேன்டீன்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது அனைத்து பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் கேன்டீன்களுக்குப் பொருந்தும்.
தடைகள்: கேன்டீன்களில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை விற்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையில், இந்தியாவில் 4-ல் பேரில் ஒருவர் உடல் பருமன் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் தான் பாதிப்புகள் ஏற்படுகிறது. தொற்றுநோயியல், மனித ஊட்டச்சத்து, சமூக ஊட்டச்சத்து, குழந்தை மருத்துவம், மருத்துவக் கல்வி, நிர்வாகம், சமூகப் பணி மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு பாடங்களில் நிபுணர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
சர்க்கரை, உப்பு: அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட உதவி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications