டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்!

போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- வீடியோ

    டெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    கடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்த முறைகேடு புகார் வைக்கப்பட்டது. அப்போது ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    Big relief for Congress: Supreme Court dismisses CBI Appeal In Bofors Case

    ரூ.1,437 கோடி ரூபாய்க்கு பீரங்கி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும், பல அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை நிர்வாகிகளுக்கும் லஞ்சம் அளித்ததாக புகார் வைக்கப்பட்டது.

    இதற்காக ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இதையடுத்து போஃபர்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. 1990-ஆம் ஆண்டு சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவின் முதல் பெரிய முறைகேடு இதுதான் என்று கூறப்பட்டது.

    10க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 15 வருடங்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையை 2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது.

    இந்த வழக்கு முடிந்து 13 வருடம் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ மீண்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனு குறித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    அதில், போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பவர்களை 2005ல் டெல்லி ஹைகோர்ட் விடுவித்தது சரியே என்றும் தீர்ப்பளித்துள்ளது.

    English summary
    Big relief for Congress: Supreme Court dismisses CBI Appeal In Bofors Case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X