பில்கிஸ் பானு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி? "தலைமறைவு" நாடகம் நடத்துகிறதா குஜராத் பாஜக அரசு?
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கின் 11 குற்றவாளிகளில் 9 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாக குஜராத் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருவதே குற்றவாளிகளை பாதுகாக்கவா? என சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் 11 குற்றவாளிகளும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை முதலில் நாடினர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றனர் 11 குற்றவாளிகள். உச்சநீதிமன்றமோ குஜராத் மாநில அரசு முடிவெடுக்கலாம் என சொன்னது. குஜராத்தில் ஆளும் பாஜக அரசோ 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது. இந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பில்கிஸ் பானு: குஜராத் பா.ஜ.க. அரசை இடித்த உச்சநீதிமன்றம்- நிலைநாட்டப்பட்டது நீதி- முதல்வர் ஸ்டாலின்
11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பில்கிஸ் பானுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர்கள் ரேவதி லால், சுபாஷினி அலி மற்றும் ரூப்ரேகா வர்மா களத்தில் நின்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்தது. மேலும் 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குழந்தைக்காக காத்திருந்த பில்கிஸ்.. குதறிய இந்துத்துவ கலவர கும்பல்! குஜராத் கலவரத்தின் கண்ணீர் கதை
ஆனால் தற்போது 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகிவிட்டதாக குஜராத் மாநில பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தாஹோத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பலராம் மீனா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே 11 குற்றவாளிகளின் சொந்த ஊரான சிங்வாட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆனாலும் குற்றவாளிகளில் சிலர் வெளியே சென்றுள்ளனர். சிலர் எங்களது கண்காணிப்பில்தான் உள்ளனர். சிலர் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை என மழுப்பலான காரணத்தை கூறியுள்ளார். அதாவது 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகிவிட்டனர் என குஜராத் பாஜக அரசு சொல்வது அப்பட்டமான பொய் நாடகம்; உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிற செயல். குஜராத் மாநில பாஜக அரசு மக்களை ஏமாற்றுகிறது என கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications