லோக்சபாவில் சிகரெட் பிடித்த எம்பி? அட இவர் 1983 கிரிக்கெட் உலககோப்பை வென்ற வீரராச்சே - வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சபை நடந்து கொண்டிருக்கும்போதே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி கீர்த்தி ஆசாத் இ-சிகரெட் புகைத்ததாக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

e cigarette parliament trinamool congress

இந்த பரபரப்புக்கு நடுவே தான் தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் இ-சிகரெட் புகைப்பது போல் உள்ளது.

வீடியோவில் இருப்பவரின் பெயர் கீர்த்தி ஆசாத். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் பர்தாமன் - துர்காபூர் தொகுதியில் எம்பியாக உள்ளார். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காட்சியை சேர்ந்த கீர்த்தி ஆசாத் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். 1983ல் முதல் முறையாக கேப்டன் கபில்தேவ் தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பிடித்து இருந்தார்.

லோக்சபாவில் சபை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது கீர்த்தி ஆசாத் தனது இருக்கையின் முன் உள்ள மேஜையில் இருந்து ஒன்றை எடுத்து வாயில் வைக்கிறார். அதனை முழுவதுமாக தனது கையால் மறைத்து கொள்கிறார். அவரது கையில் இருப்பது இ- சிகரெட் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோவை ஜகவின் ஐடி விங்க்கின் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

e cigarette parliament trinamool congress

அந்த பதிவில், ‛‛இவரை (கீர்த்தி ஆசாத் எம்பி) போன்றவர்களுக்கு விதிகள் மற்றும் சட்டங்கள் ஒரு பொருட்டே இல்லை. அவைக்குள் தனது உள்ளங்கையில் இ- சிகரெட்டை மறைத்துவைத்து பயன்படுத்தும் தைரியம் உள்ளது. புகைபிடிப்பது சட்டவிரோதம் அல்ல என்றாலும், நாடாளுமன்ற வளாகத்தில் அதைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தனது எம்பியின் தவறான நடத்தைக்கு மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாஜகவின் எம்பி அனுராக் தாகூர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு எழுத்துப்பூர்வமான புகாரை வழங்கினார். நாடாளுமன்ற சபைக்குள் இ- சிகரெட் பயன்படுத்தப்படுகிறது. அதனை பயன்படுத்தியதாக கூறப்படும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சபையில் அனுராக் தாகூர் பேசும்போது ‛‛நம் நாட்டை பொறுத்தவரை இ- சிகரெட் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் அதனை நாடாளுமன்ற வளாகத்தில் புகைப்பது குற்றமாகும். இதனால் உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் இ- சிகரெட் புகைத்தார்கள் என்பது சபையில் உள்ளவர்களுக்கு தெரியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்த புகாரை சபாநாயகர் ஓம்பிர்லா தீவிரமாக எடுத்துள்ளார். வீடியோ ஆதாரங்களை திரட்டி வருவதோடு, புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் சபைக்குள் இ-சிகரெட் புகைப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+