தென்னிந்தியாவிலும் இனி பாஜக தான்.. "இந்தியா" கூட்டணியை பின்னுக்கு தள்ளியது.. பரபர சர்வே முடிவுகள்
டெல்லி: லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், இதில் தென்தமிழகத்தில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது..
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்தியா டிவி சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் தென்தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு: இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே மொத்தம் 39 தொகுதிகள் உள்ளது. அதில் திமுக 22 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதில் அவர்கள் 18 இடங்களில் வெல்வார்கள் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவர்கள் 8 தொகுதி வெல்வார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வே அதிமுகவுக்குத் தான் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அதிமுக தமிழகத்தில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணியில் பாஜக 3 சீட்களிலும் பாமக ஒரு இடத்திலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 5 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
கேரளா: கேரளாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 20 சீட்கள் உள்ளன. இந்த 20 இடங்களில் அதிகபட்சமாகக் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் கூட்டணி 7 சீட்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கே பாஜக கூட்டணி 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகா: அடுத்த கட்டமாகக் கர்நாடகாவில் மொத்தம் 28 இடங்கள் உள்ள நிலையில், அங்கே பாஜக ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. அங்கே பாஜக- ஜேடிஎஸ் கூட்டணி இருக்கும் நிலையில், இந்தக் கூட்டணி 24 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 22 சீட்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும் வெல்லும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அங்கு மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திராவில் மொத்தம் 25 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.அங்கே அதிகபட்சமாக என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 12 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜக 3 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே 17 இடங்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆதிக்கம் தான் அங்கே அதிகம் செலுத்துகிறது. அங்கே காங்கிரஸ் 9 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோக அங்குக் கடந்த 9 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரே ஒரு இடம் இருக்கும் நிலையில், அங்கே பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தம் சேர்த்து 130 இடங்கள் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இங்கு 48 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் பாஜக கூட்டணி இங்கே 52 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர 30 இடங்களில் மற்ற கட்சிகள் வெல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாகத் தென்னிந்தியாவில் காங்கிரஸ் ஆதிக்கமே அதிகம் இருக்கும் எனக் கூறப்படும். ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே வந்துள்ளது.












Click it and Unblock the Notifications