Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறிய எடப்பாடி முகம்.. ‘போனையே எடுக்காத பாஜக புள்ளி’.. பாதியில் பிளானை மாற்றியதன் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பெரும் நம்பிக்கையோடு டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமியை அப்செட் ஆக்கி பாதியிலேயே அனுப்பி வைத்திருக்கிறது பாஜக தலைமை.

அதிமுக விவகாரத்தில், பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு இருப்பதை டெல்லிக்கு எடுத்துச் சொல்லி தன் பக்கம் முழு ஆதரவையும் திருப்பி விடலாம் எனக் கணக்குப் போட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், ஈபிஎஸ்ஸின் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. பாஜக தலைமையின் சிக்னல் தங்களுக்கு கிடைக்காதது, ஈபிஎஸ் தரப்புக்கு சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தனக்கு ஆதரவாக பாஜக தலைமையின் கரத்தை திருப்பும் நம்பிக்கையோடு டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 4 நாள் பயணமாக கடந்த 22-ஆம் தேதி டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.

பாதியில் கேன்சல்

பாதியில் கேன்சல்

டெல்லியில் 4 நாட்கள் தங்கி இருந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, அதிமுகவின் நிலை குறித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாஜக, ஈபிஎஸ் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் ஏமாற்றத்தோடு திரும்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் திட்டம்

ஈபிஎஸ் திட்டம்

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம், கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை விளக்கி, பாஜக தன் பக்கமே ஆதரவு காட்ட வேண்டும், ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அழிந்துவிட்டது எனக் கூறி, முழுமையாக பாஜகவின் ஆதரவை தன் பக்கம் கவர்ந்து விட வேண்டும் என்பதற்காகத்தான், பிரதமர் மோடி 28ஆம் தேதி சென்னை வரும் நிலையிலும், அதற்கு முன்னதாக டெல்லிக்கு ஃப்ளைட் ஏறினார் எடப்பாடி பழனிசாமி.

நேரம் ஒதுக்கவில்லை

நேரம் ஒதுக்கவில்லை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை. பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் முன்பு நம்பிக்கையோடு பேசிய நிலையில், அவரும் கொஞ்சம் பின்வாங்கியதால், தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

கடந்த ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயன்றார். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. இதனால், பாஜக ஆதரவு தன் பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைமை சந்திக்க மறுத்தது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: விரைவில் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
    கைவிரித்த டெல்லி

    கைவிரித்த டெல்லி

    டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நலம் விசாரித்த போதெல்லாம் சிரித்த முகத்தோடு உற்சாகமாக காணப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் எதுவும் ஈபிஎஸ்ஸுக்கு உவப்பானதாக இல்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதற்கு முன்பாக அவரைச் சந்தித்து அதிமுக நிலைமை, அரசியல் சூழல், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் வருமான வரித்துறையால் குறி வைக்கப்பட்டிருப்பது குறித்து பேச விரும்புவதாக பாஜகவினரிடம் தெரிவித்துள்ளார் ஈபிஎஸ்.

    போன் எடுக்காத புள்ளி

    போன் எடுக்காத புள்ளி

    பின்னர் தான் எல்லாம் எதிராக மாறியுள்ளது. இப்போது சந்திக்க நேரமில்லை என கட் அண்ட் ரைட்டாக பதில் வந்துள்ளது. ஆனாலும், விடாமல் கொஞ்ச நேரமாவது பேசிவிட வேண்டும், இதற்காகத்தான் வந்திருக்கிறேன் என ஈபிஎஸ் அழுத்தம் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான ஈபிஎஸ் சந்திப்பை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதாகச் சொன்ன பாஜக புள்ளியே எடப்பாடி பழனிசாமியின் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    சென்னைக்கு ஃப்ளைட்

    சென்னைக்கு ஃப்ளைட்

    இதையடுத்தே, 4 நாட்களுக்கு போட்டிருந்த பிளானை அவசர அவசரமாக மாற்றி சென்னைக்கு ஃப்ளைட் பிடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லி பயணம் ஏமாற்றியதால், தமிழகம் முழுவதும் நாளை திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி தன் பலத்தை நிரூபித்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான பணிகளை முடுக்கி விடுவதற்காகவே அவர் சென்னை விரைந்ததாகக் கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+