அல்வா கொடுத்த ஆப்பிள் தேசம்! 4 ஆண்டுகளில் நடந்திராத 'மாஸ்’ சம்பவம்! பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் காங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, அதாவது 2019க்கும் பிறகு இதுவரை 20 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்துள்ளன. அதில் பாஜக ஆண்ட ஒரே ஒரு மாநிலத்தில் தான் ஆட்சியைப் பறிகொடுத்திருந்தது. அந்த மாநிலம் ஜார்க்கண்ட். இரண்டாவது முறையாக இன்று இமாச்சல பிரதேசத்தில் சரிவைச் சந்தித்துள்ளது பாஜக.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலம் எனப் பார்த்தால் கடைசியாக 2018ஆம் ஆண்டு சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அதன்பிறகு தற்போது இமாச்சலில் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளது காங்.

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, குஜராத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது. அதேசமயம், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பறிகொடுக்க உள்ளது பாஜக.

கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சியை மட்டுமே கண்டுகொண்டிருந்த பாஜக,'ஆப்பிள்' தேச தோல்வியின் மூலம் இறங்குமுகத்தைச் சந்தித்திருக்கிறது.

அசுர பலத்தோடு

அசுர பலத்தோடு

2019ல் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அதுவும் 303 தொகுதிகளில் வென்று பெரும் பலத்தோடு சர்வ அதிகாரத்தைக் கைப்பற்றிய கையோடு, நாடு முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தோடு ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்துக் களமிறங்கியது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது.

10ல் பாஜக ஆட்சி

10ல் பாஜக ஆட்சி

பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, தற்போது வரை நடந்த 20 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பாஜக கூட்டணி வென்று, பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி இந்த 20ல் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் தான் தற்போது ஆட்சியைப் பிடிப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

2019 முதல்

2019 முதல்

2019 அக்டோபரில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. 2019 சட்டசபைத் தேர்தலில் மகாராஷ்டிராவிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் கூட்டணியில் ஏற்பட்ட முரண்களால், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க, பாஜகவைக் கழற்றி விட்டார் உத்தவ் தாக்கரே. எனினும் சிவசேனாவில் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணியை உருவாக்கி, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து இந்தாண்டு மீண்டும் பாஜக - ஷிண்டே அணி அரியணை ஏறியது.

ஜார்க்கண்டில்

ஜார்க்கண்டில்

2019ல் நடந்த ஜார்க்கண்ட் தேர்தலில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி மீதான கடும் எதிர்ப்பலையால் ஜார்க்கண்டில் ஆட்சியைப் பறிகொடுத்தது பாஜக. அதற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் ஆம் ஆத்மியிடம் தோல்வியைத் தழுவினாலும், பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றது பாஜக. நிதிஷ் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டதால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் நிதிஷ் குமார்.

சரிவு இல்லை

சரிவு இல்லை

கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அசாமில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த 5ல் பாஜக ஆட்சி அமைக்காத 3 மாநிலங்களில் எங்குமே பாஜக முன்னரும் ஆட்சியில் இருந்திராததால், இது பாஜகவின் சரிவாகப் பார்க்கப்படவில்லை.

4ல் 3

4ல் 3

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்தது ஆம் ஆத்மி கட்சி. இந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு சரிவே தவிர, பாஜகவுக்கு ஏறுமுகம் தான்.

அமோக வெற்றி

அமோக வெற்றி

இந்நிலையில் தற்போது நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசம் என இரு மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தில் அமோக வெற்றியை உறுதி செய்துள்ளது பாஜக. பாஜக இரண்டாவது முறையாக 2019ல் ஆட்சிக்கு வந்தபிறகு, 7 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இவைபோக, பல மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து அரியணை ஏறியிருக்கிறது பாஜக.

தற்போது பாஜக ஆட்சியில்

தற்போது பாஜக ஆட்சியில்

தற்போது அருணாசல பிரதேசம், அசாம், கோவா, ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இன்று மீண்டும் குஜராத் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதால், பாஜக நேரடியாக ஆட்சி அமைக்கும் மாநிலங்கள் 11 ஆக இருக்கின்றன. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்திருப்பதன் மூலம், பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களின் லிஸ்ட் 12ல் இருந்து 11ஆக குறைந்திருக்கிறது.

3ஆக உயரும் காங்கிரஸ்

3ஆக உயரும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. 2019க்குப் பிறகு நடைபெற்ற ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. கையில் இருந்த பஞ்சாப், புதுச்சேரி மாநிலங்களையும் கடந்த 2 ஆண்டுகளில் இழந்தது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் தான், பாஜக வசமிருந்த இமாச்சல பிரதேசத்தைத் தட்டிப் பறித்து தாங்கள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தி இருக்கிறது காங்கிரஸ்.

 கடந்த 4 ஆண்டுகளில்

கடந்த 4 ஆண்டுகளில்

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலம் எனப் பார்த்தால் கடைசியாக 2018ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் ராமன் சிங் ஆட்சியை அகற்றி காங்கிரஸின் பூபேஷ் பாகல் முதல்வரானார். அதேபோல, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே ஆட்சியை அகற்றி காங்கிரஸின் அசோக் கெலாட் முதல்வர் ஆனார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றி அரியணை ஏறவிருக்கிறது காங்கிரஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+