Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா: அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் பாஜக எம்.பிக்கள் 'தேர்தல் வெற்றி' முழக்கம்- ரசித்த மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் "Teesri Baar Modi Sarkar" "Baar Baar Modi Sarkar" (மீண்டும் மீண்டும் மோடி சர்க்கார்) என பாஜக எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜகவும் 1 மாநிலத்தி காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளது.

BJP MPs raise the slogan of Teesri Baar Modi Sarkar in Lok Sabha

இந்த குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஜம்மு காஷ்மீர்-புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கும் மசோதாக்கள், தேர்தல் ஆணையர் நியமன மசோதா, குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் உள்ளிட்ட 19 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு டிசம்பர் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதன் மூலமாக எதிர்க்கட்சிகளின் இமேஜ் உயரத்தான் செய்யும். ஜனநாயகத்திலும் எதிர்க்கட்சிகளும் முக்கியமானவைதான் என்றார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் தொடங்கிய போது மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் Teesri Baar Modi Sarkar" "Baar Baar Modi Sarkar என முழக்கங்களை எழுப்பினர். அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் சீரியசாக பேசிக் கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான இந்த முழக்கம் சில நிமிடங்கள் நீடித்தது.

இன்றைய சபைக்கு பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி, பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கறுப்பு பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி வருகை தந்தார். கடந்த கூட்டத்தில், டேனிஷ் அலியை தீவிரவாதி என கடுமையாக விமர்சித்திருந்தார் ரமேஷ் பிதூரி.

மேலும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவும் இன்று சபைக்கு வருகை தந்தார். மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை குழு அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கலாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் லோக்சபாவில் கேள்வி நேரம் தொடங்கிய போதும் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி எழுந்து பாஜக எம்பி ரமேஷ் பிதூரி நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பிக்களும் முழக்கமிட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+