டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக லோக்சபா எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ்.. இன்று முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக லோக்சபா எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று லோக்சபா எம்பிக்கள் எல்லோரும் அவைக்கு வர வேண்டும் என்று அக்கட்சி சார்பாக விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக லோக்சபாவில் முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போது பாஜக தனது எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ் கொடுக்கும். முக்கியமான மசோதாவை தாக்கல் செய்ய போகிறோம்... வந்து ஆதரவாக வாக்களியுங்கள் என்று விப் நோட்டீஸ் வழங்கப்படும்.

BJP sends Whip Notice to its Lok Sabha members today

இந்த நிலையில் இன்று நடக்கும் அவையில் கலந்து கொள்ளும்படி பாஜக கொறடா ராகேஷ் சிங் மூலம் கட்சியின் அனைத்து எம்பிகளுக்கும் விப் நோட்டீஸ் சென்றுள்ளது. முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

புதிய வங்கிகள் திறப்பு தொடர்பாகவும், வேறு சில இரண்டு மசோதாவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று டெல்லி அரசின் அதிகாரத்தை மாற்றும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

டெல்லியின் அதிகாரத்தை மாற்றும் "தேசிய தலைநகர் பகுதி டெல்லி சட்ட திருத்தம் 2021" நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு முதல்வரை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மேலும் சில முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதால் பாஜக லோக்சபா எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
BJP sends Whip Notice to its Lok Sabha members today to introduce new bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X