ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆக.5-ல் கறுப்பு உடையுடன் போராட்டமா? காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆகஸ்ட் 5-ந் தேதியன்று கறுப்பு உடையுடன் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம் உள்ளிட்டவற்றை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: ஆகஸ்ட் 5-ந் தேதியை போராட்ட நாளாக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருக்கிறது. சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்துகிற ஒரு நடவடிக்கைதான் இது. ஆகஸ்ட் 5-ந் தேதிதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட புனித நாளில்தான் காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம் காங்கிரஸின் உள்நோக்கம் அம்பலமாகிவிட்டது.

இத்தனைக்கும் அமலாக்கப் பிரிவு யாருக்கும் எந்த ஒரு சம்மனையும் இன்று அனுப்பவும் இல்லை. ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தி இருக்கிறது. அதுவும் நாடு தழுவிய அளவில் கறுப்பு உடை அணிந்து போராடி இருக்கின்றனர். அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கிய நாளில் கறுப்பு உடை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதிக்கிறது. அயோத்தி கட்டுமானப் பணிகளை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மாண்புகளையும் காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications